திருவோண விரதம் இருப்பது எப்படி? | Thiruvona Vratham Irupathu Eppadi Tamil

Thiruvona Vratham Irupathu Eppadi Tamil

திருவோண விரதம் என்றால் என்ன? | Thiruvona Vratham Benefits inTamil

மாதம்தோறும் திருவோணம் நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதத்தை திருவோண விரதம் என்று சொல்கிறோம். ஒவ்வொரு மாதமும் வைணவர்கள் திருவோண விரதத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த திருவோண நட்சத்திரமானது பெருமாளுக்கு உரிய நட்சத்திரமாகும். வாழ்வில் ஒருமுறை இந்த திருவோண விரதத்தை கடைப்பிடித்து வந்தால் அனைத்து விதமான நல்ல பலன்களையும் பெறலாம் என்பது ஐதீகம். இந்த பதியவள் திருவோண விரதம் என்றால் என்ன? திருவோண விரதத்தை எப்படி எடுப்பது? என்ற விவரங்களை இந்த பதிவில் படித்து அறிவோம் வாங்க..

சோமவார விரதம் இருக்கும் முறை

திருவோண விரதம் என்றால் என்ன?

திருமாலின் 10 அவதாரங்களில் ஒன்று இந்த வாமன அவதாரம். இந்த வாமன அவதாரம் நடந்தது இந்த திருவோணம் நட்சத்திரத்தில் தான். இதனால் தான் ஆவணி மாதத்தில் வருகின்ற திருவோண நட்சத்திரத்தில் கேரள நாட்டில் ஓணம் பண்டிகையானது மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பங்குனி மாத திருவோண நடசத்திரத்தில் மார்கண்டேய மகரிஷியின் மகளான பூமி தேவியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு சென்றார்.

ஐப்பசி மாத திருவோண நட்சத்திரத்தில் தான் தேவியை ஒப்பிலியப்பன் பெருமான் மணந்து கொண்டார். இதனால் ஒப்பலியப்பன் பெருமாள் கோயிலில் ஒவ்வொரு திருவோண நட்சத்திர தினமும் மிக விமர்சையாக நடைபெறும்.

சந்திர தோஷம் நீங்க:

தோஷங்களில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுவது சந்திர தோஷம். சந்திர தோஷம் இருப்பவர்களின் மனநிலையானது குழப்ப நிலையில் இருப்பார்கள். தான் செய்யும் செயல்கள் சரியா? தவறா என்ற குழப்பத்துடனே செய்வார்கள்.

சந்திர தோஷம் இருப்பவர்கள் திருவோண விரதம் அன்று பெருமாளிற்கு விரதம் எடுத்து வழிபாடு செய்து வர சந்திர தோஷம் நீங்கும். மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்து சந்திரனின் அருளையும் பெறலாம்.

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி

திருவோண விரதம் இருப்பது எப்படி?

திருவோண விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் முதல் நாள் இரவு உணவு உண்ணாமல் இருக்க வேண்டும். திருவோண விரதம் அன்று காலையிலையே எழுந்து சுத்தமாக நீராடிய பிறகு நல்ல ஆடைகளை  அணிந்துகொண்டு பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபாடு செய்யலாம்.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டு பூஜை அறையிலையே பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விளக்கு ஏற்றிவைத்து வழிபாடு செய்யலாம். காலையில் துளசி தீர்த்தத்தை மட்டுமே அருந்த வேண்டும்.

மதியம் உணவு எடுத்துக்கொள்ளும் போது உணவில் உப்பு சேர்த்து கொள்ளக்கூடாது.  உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டால் ஒப்பிலியப்பன் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதன் பிறகு மாலையில் நெய் விளக்கு ஏற்றி பெருமாளுக்கு மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்யுங்கள். இரவில் பால் மற்றும் பழம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.

சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை

திருவோண விரத பலன்கள்:

  • காலை நேரத்தில் இந்த விரதத்தை பக்தியுடன் செய்து வந்தால் உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் குணமாகும்.
  • மதிய நேரத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளும் போது செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
  • மாலை நேரத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளும் போது நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.
  • கடைசியாக இரவு நேரத்தில் ஜாம வழிபாடு செய்யும்போது முக்தி பேறு கிடைக்கும். வாழ்க்கையில் பல திருப்பங்களை தரும் திருவோண விரதம் இருந்து பெருமாளின் அருளை அனைவரும் பெறுங்கள்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்