சொந்த வீடு அமைய தீபம்
சொந்த வீடு கட்ட வேண்டும் அல்லது சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கிறது. அதற்காக எவ்வளவு முயற்சி செய்தாலும் சொந்த வீடு அமைய வில்லை என்ற நினைப்பீர்கள். ஆகையால் உங்களுடைய சொந்த வீடு அமைய வேண்டும் என்ற கனவிற்கு பயனளிக்கும் வகையில் இன்றைய பதிவு உதவியானதாக இருக்கும். கார்த்திகை அன்று இந்த ஒரு விளக்கை மட்டும் மறக்காமல் ஏற்றுங்கள். அதன் பிறகு உங்களுக்கு சொந்த வீடு அமைவதற்கான அனைத்து அமங்களும் ஒன்றிணைந்து காணப்படும்.
கார்த்திகை அன்று முருகப்பெருமானை மனதில் நினைத்து நாம் விளக்கு ஏற்றினால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம்.
கார்த்திகை தீபம்:
கார்த்திகை அன்று முருகனை நினைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளில் தீபம் ஏற்றினால் சொந்த வீடு அமையும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
தீபம் ஏற்றும் முறை:
இந்த விளக்கை நீங்கள் முருகன் கோவிலில் ஏற்ற வேண்டும். அப்படி உங்களுடைய வீட்டிற்கு அருகில் முருகன் கோவில் இல்லையென்றால் வீட்டிலும் இந்த விளக்கு ஏற்றலாம்.
முதலில் நீங்கள் பயன்படுத்தாத 6 அகல் விளக்கு, திரிநூல் மற்றும் சுத்தமான நெய் ஆகிய மூன்றையும் வாங்கிகொள்ளுங்கள்.
அடுத்ததாக நீங்கள் வாங்கிய 6 அகல் விளக்குகளிலும் திரிநூல் மற்றும் நெய் ஊற்றி விளக்கை ஏற்றிவிடுங்கள்.
நீங்கள் ஏற்றிய இந்த 6 விளக்குகளும் முருகப்பெருமானை நோக்கி கிழக்கு அல்லது மேற்கு திசையில் இருக்குமாறு வைத்து விளக்கை எறிய விடுங்கள். ஒருவேளை நீங்கள் வீட்டில் விளக்கு ஏற்றினால் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்குமாறு விளக்கை ஏறிய விடுங்கள்.
கோவிலில் நீங்கள் விளக்கு ஏற்றினீர்கள் என்றால் முருகப்பெருமானுக்கு ஒரு அர்ச்சனை செய்து சொந்த வீடு அமைய வேண்டும் என்று மனதில் நினைத்து உங்களுடைய கோரிக்கையை முருகப்பெருமானிடம் வைய்யுங்கள்.
வீட்டில் நீங்கள் விளக்கு ஏற்றினால் ஒரு தேங்காயை எடுத்துக்கொண்டு நீங்கள் ஏற்றிய விளக்கின் முன் உடைத்து முருகனை மனதில் நினைத்து வழக்கம் போல் வழிபட்டு கொள்ளுங்கள்.
நீங்கள் ஏற்றும் 6 விளக்கும் வரிசையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தீபம் ஏற்றும் நேரம்:
இந்த பரிகார தீபத்தை கார்த்திகை அன்று மாலை 6 முதல் 9 மணிக்குள் ஏற்ற வேண்டும். அப்படி நீங்கள் ஏற்றும் தீபம் 1/2 மணி நேரம் எறிய விடுங்கள்.
தீபம் ஏற்றி முடிந்ததும் உங்கள் வீட்டில் செய்து இருக்கும் பொருட்களை வைத்து கடவுளுக்கு படைத்து விடுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ கார்த்திகை அன்று இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |