Thisai Astrology in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் ஒருவருக்கு திசை எந்த வருடம் நடக்கும், ஒவ்வொரு திசைக்கான பலன்கள், ஒருவரின் ஜாதகத்தில் என்ன திசை நடக்கிறது என்று திசைகள் பற்றிய தகவல்களை தான் தெரிந்து கொள்ள போகின்றோம். திசை என்றால் என்னவென்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். திசை என்றால் நவகிரகங்களின் ஆதிக்கம் தான் திசை என்று சொல்லப்படுகிறது. அப்படி மொத்தம் 9 நவகிரக திசைகள் உள்ளன. அந்த நவகிரக திசைகளின் பலன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க.
திசைகள் எத்தனை வருடம்:
பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கும் 9 கிரகங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அது போல அந்த கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும்.
அது போல நாம் பிறக்கும் போது இருக்கின்ற கிரக அமைப்பு நிலவரப்படி தான் நம்முடைய ஜனன ஜாதகம் அமைகின்றது. கிரகங்களின் ஆதிக்கம் நமக்கு திசையாக நடந்தாலும், புத்தியாக நடந்தாலும் அதற்குரிய கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு வந்தால் வாழ்க்கை வளமாகும். வாழ்வில் இருக்கும் தடைகள் நீங்கும்.
அதேபோல, ஒரு மனிதனின் வாழ்க்கையில் மொத்தம் 9 திசைகள் நடைபெறும் என்று ஜோதிடம் சாஸ்திரம் கூறுகிறது. அந்த 9 திசைகளும் ஒருவருக்கு நடந்து முடிய 120 வருடங்கள் ஆகுமாம். ஆகவே அந்த 9 திசைகளின் வருடங்கள் என்ன என்று தற்போது காண்போம்.
- சூரிய திசை – 6 வருடங்கள்
- சந்திர திசை – 10 வருடங்கள்
- செவ்வாய் திசை – 7 வருடங்கள்
- ராகு திசை – 18 வருடங்கள்
- குரு திசை – 16 வருடங்கள்
- சனி திசை – 19 வருடங்கள்
- புதன் திசை – 17 வருடங்கள்
- கேது திசை – 7 வருடங்கள்
- சுக்ர திசை – 20 வருடங்கள்
உங்களுக்கு என்ன திசை நடக்கிறது..?
ஒருவரின் குணத்தை வைத்து அவருக்கு என்ன திசை நடக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அது எப்படி என்பதை தற்போது காண்போம்.
♦ தன்னை தானே கெடுத்து கொண்டால் உங்களுக்கு ராகு திசை நடக்கிறது என்று அர்த்தம்.
♦ பிறரை நீ கெடுக்க நினைத்தால் உங்களுக்கு கேது திசை நடக்கிறது.
♦ பிறரை நீங்கள் பழிவாங்க நினைத்தால் உங்களுக்கு சனி திசை நடக்கிறது என்று அர்த்தம்.
♦ உங்களின் செல்வாக்கு உயர்ந்தால் உங்களுக்கு செவ்வாய் திசை நடக்கிறது என்று அர்த்தம்.
♦ உங்களுக்கு நற்பண்புகள் வந்து விட்டால் உங்களுக்கு புதன் திசை நடக்கிறது.
♦ நீங்கள் அதிக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு சூரிய திசை நடக்கிறது.
♦ ஒருவர் நிலையற்ற செயல்கள் செய்கிறார் என்றால், அவருக்கு சந்திர திசை நடக்கிறது.
♦ உங்களுக்காக நீங்கள் புண்ணியம் செய்தால், அது சுக்கிர திசை ஆகும்.
♦ உலகில் உள்ள அனைவருக்காகவும் நீங்கள் புண்ணியம் செய்தால் உங்களுக்கு குரு திசை நடக்கிறது என்று அர்த்தம்.
இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |