வளர்பிறை மற்றும் தேய்பிறை திதிகளின் தெய்வங்கள்..!

Advertisement

திதி தெய்வங்கள் | Thithi Deivangal in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வளர்பிறை மற்றும் தேய்பிறை திதிகளின் தெய்வங்கள் (Thithi Deivangal in Tamil) பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. திதி என்பது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் திதி ஆகும். திதி என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்பதம் “நிலவின் பிறை தினம்” என்பதாகும். ஒவ்வொரு நாளும் நிலவின் பிறையை பொறுத்தே திதி பெயர்கள் கூறப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகிறது. அவற்றில் இரண்டு பட்சங்கள் உள்ளது. கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும். இதனை நமக்கு வளர்பிறை திதி மற்றும் தேய்பிறை திதி என்று கூறினால் தான் தெரியும். பஞ்சகத்தில் மொத்தம் 15 வகையான திதிகள் உள்ளன. நீங்கள் பிறந்த திதியின் தெய்வங்களை அறிந்து கொண்டு அதனை வணங்கி வந்தால் வாழ்வில் நற்பலன்களை பெறலாம். எனவே, இப்பதிவின் வாயிலாக, 15 திதிகளில் பெயர்களும் அவற்றின் தெய்வங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

எந்த திதியில் என்ன செய்யலாம்..!

சுக்லபட்சம் அல்லது வளர்பிறை திதிகளின் தெய்வங்கள்:

வ.எண்  திதிகள்  தெய்வங்கள் 
1 பிரதமை குபேரன் மற்றும் பிரம்மா
2 துவதியை பிரம்மா
3 திரிதியை சிவன் மற்றும் கவுரி மாதா
4 சதுர்த்தி எமன் மற்றும் விநாயகர்
5 பஞ்சமி திரிபுர சுந்தரி
6 சஷ்டி செவ்வாய்
7 சப்தமி ரிஷி மற்றும் இந்திரன்
8 அஷ்டமி காலபைரவர்
9 நவமி சரஸ்வதி
10 தசமி வீரபத்திரர் மற்றும் தர்மராஜன்
11 ஏகாதசி மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12 துவாதசி மகா விஷ்ணு
13 திரையோதசி மன்மதன்
14 சதுர்த்தசி காளி
15 பவுர்ணமி லலிதாம்பிகை

கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறை திதிகளின் தெய்வங்கள்:

வ.எண்  திதிகள்  தெய்வங்கள் 
1 பிரதமை துர்க்கை
2 துவதியை வாயு
3 திரிதியை அக்னி
4 சதுர்த்தி எமன் மற்றும் விநாயகர்
5 பஞ்சமி நாகதேவதை
6 சஷ்டி முருகன்
7 சப்தமி சூரியன்
8 அஷ்டமி மகா ருத்ரன் மற்றும் துர்க்கை
9 நவமி சரஸ்வதி
10 தசமி எமன் மற்றும் துர்க்கை
11 ஏகாதசி மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12 துவாதசி சுக்ரன்
13 திரையோதசி நந்தி
14 சதுர்த்தசி ருத்ரர்
15 பவுர்ணமி பித்ருக்கள் மற்றும் காளி

திதிகளும் அவற்றின் பலன்களும்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement