திதி கொடுக்க தேவையான பொருட்களின் முழு விபரம்

Advertisement

திதி கொடுக்க தேவையான பொருட்கள் | Thithi Kodukka Thevaiyana Porutkal 

நண்பர்களுக்கு வணக்கம் பொதுவாக முன்னோர்களுக்கு வருடாவருடம் திதி கொடுப்பது என்பது ஒரு வழக்கமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இத்தகைய திதியை வீட்டில் கொடுப்பது நல்லதா? அல்லது கோயில்களில் கொடுப்பது நல்லதா என்று பலருக்கு பல குழப்பம் இருந்து வருகிறது. வருடம் வருடம் நாம் நமது முன்னோர்களுக்கு கொடுக்கும் திதியை சிராத்தம் என்று அழைப்பார்கள் அவற்றை நாம் குடியிருக்கும் வீட்டில் தான் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் அதற்கான பலன்கள் நமக்கு கிடைக்கும்.ஆக முடிந்தவற்றை இந்த சிராத்தம் திதியை வீட்டில் செய்யுங்கள்.

ஒருவேளை உங்கள் வீட்டில் சிராத்தம் செய்யமுடியாத சூழ்நிலையில் மட்டும் சிராத்தம் திதியை கோயில்களில் உள்ள குளங்களில் செய்யலாம். அனால் கோயிலின் உள்ளே மட்டும் சிராத்தம் திதி கொடுக்க கூடாது. மற்றபடி ஆறு, ஏரி, குளம், சமுத்திரம் இது போன்ற தீர்த்த கரைகளிலும், புண்ணிய ஸ்தலங்களிலும் சிராத்தம் திதி கொடுக்கலாம். இருப்பினும் வீட்டில் சிராத்தம் திதி கொடுப்பது தான் மிகவும் சிறந்த ஒன்றாக சொல்லப்படுகிறது. சரி இந்த திதி கொடுக்க தேவையான பொருட்கள் என்னென்ன என்பது குறித்து இப்பொழுது நாம் பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எந்த திதியில் என்ன செய்யலாம்..!

தர்ப்பணம் என்றால் என்ன.?

இறந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். ஆடி அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அன்றைய தினத்தில் இறந்த முன்னோர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக காய்கறிகள், அரிசி உள்ளிட்ட பல பொருட்களை வைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள். பித்ரு தர்ப்பணம் மூன்று தலைமுறை முன்னோர்களுக்காகச் செய்யப்படுகிறது.

திதி கொடுப்பது எப்படி.? | வீட்டில் திதி கொடுப்பது எப்படி.?

thithi kodupathu eppadi in tamil

 

  • எள், தண்ணீர் இந்த இரண்டு பொருட்கள் இருந்தாலே போதும் நமது முன்னோர்களுக்கு வீட்டிலேயே திதி கொடுக்கலாம்.
  • அதாவது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எள்ளு போட்டு அதில் தண்ணீர் ஊற்றி உங்கள் முன்னோர்களின் படத்திற்கு கீழ் வைத்து வேண்டிக்கொள்ளவும். பின் அதனை கால்படாத இடத்தில் ஊற்றிவிடலாம்.
  • இது தவிர காய்கறிகள், பழங்கள், அகத்திக்கீரை, ஊறவைத்த பச்சை அரிசியில் வெல்லம் கலந்து இந்த அனைத்து பொருட்களையும் பசுமாற்றிக்கு அன்றைய நாள் கொடுக்கலாம். இதனுடன் எள் கலந்த அரிசியை காகத்திற்கு வைக்கலாம்.
  • பிறகு அன்றைய நாள் விரதம் இருந்து சமைத்து உங்கள் முன்னோருக்கு படைத்தது காகத்திற்கு வைத்துவிட்டு வீட்டில் இருப்பவர்கள் உணவருந்தலாம்.

தர்ப்பணம் செய்ய தேவையான பொருட்கள் :

  • தேங்காய்
  • வாழைப்பழம்
  • வெற்றிலை
  • பாக்கு
  • தர்ப்பை
  • பூணூல்
  • பச்சரிசி
  • வாழை
  • காய்கறிகள் 
  • இலை
  • மாவிலை
  • திருநீர்
  • குங்குமம்
  • சந்தனம்
  • எள்
  • பால்
  • தயிர்
  • பஞ்சகவ்வியம்

திதி காய்கறிகள்:

தர்ப்பணம் கொடுக்கும்போது வாழை இலையில் அரசி, வெல்லம், பைத்தம்பருப்பு, வாழைக்காய், சேப்பங்கிழங்கு, கொத்தவரங்காய், புடலங்காய், வாழைத்தண்டு ஆகியவை கட்டாயம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் திதி கொடுக்கும் காய்கறிகள் மாறுபடும். அதாவது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான காய்கறிகளை வைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள். எந்த காய்கறி வைத்தாலும் அதில் முக்கியமாக , சேப்பங்கிழங்கு, கொத்தவரங்காய், வாழைக்காய், புடலங்காய், வாழைத்தண்டு ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும்.  

மேலும், அன்றைய நாளில் 5 அல்லது 7 விதமான காய்கறிகள் சமைக்க வேண்டும். அவற்றில் பாகற்காய், வாழைக்காய், கொத்தவரங்காய், வாழைத்தண்டு, சேப்பங்கிழங்கு இந்த அனைத்து காய்கறிகளையும் கட்டாயம் சமைத்து தர்ப்பணம் கொடுக்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இறந்தவர்களின் திதி தேதியை எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா..?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement