தூக்கத்தை விரும்பும் ராசிக்காரர்கள் | Zodiac Signs Who Love Sleep in Tamil
பொதுவாக இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவரும் ஒவ்வொரு குணம் உடையதாக இருக்கும். அன்பு, கோபம், கருணை பிற குணங்கள் ஆனது ஒவ்வொருவரிடத்திலும் வேறுபடும். சில பேர் தூங்கி கொண்டே இருப்பார்கள். சில பேர் தூங்கி கொண்டே இருப்பார்கள். அவர்களை பார்த்து நாம் தூங்குமூஞ்சியாக இருப்பார்கள் போல பொழுதினைக்கும் தூங்கி கொண்டே இருக்கிறார்கள் என்று கூறுவார்கள். சில பேர் உடல் அசதியால் தூங்குவார்கள், சில பேர் பிறந்த ராசி கூட காரணமாக இருக்கலாம். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
துலாம்:

துலா ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஓர் நிமிடம் கூட சும்மா இருக்க மாட்டார்கள். ஏதாவது வேலை பார்த்து கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்களது உடலானது சோர்வு நிலையை அடையும். இவர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ்வதற்கு விரும்ப மாட்டார்கள். மற்றவர்கள் மீது அன்பும், அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பிடித்த இடம் என்று சொன்னால் அது படுக்கை அறை தான். இந்த ராசிக்காரர்கள் குழப்பமான மன நிலையில் இருந்தால் கூட இதிலிருந்து தெளிவான மன நிலைக்கு வருவதற்கு தூக்கத்தை தான் தேடுவார்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் அனைவரின் மீது அன்பாக இருக்க கூடியவர்கள். இவர்கள் கடின உழைப்பாளியாக இருப்பதால் பல நேரங்களின் இவர்களது உடலானது சோர்வடையும். இதனால் இவர்கள் தூக்கத்தை விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கையில் தூக்கம் என்பது முக்கியமான இடத்தில் இருக்கிறது. இந்த ராசிக்கார்களுக்கு உலகிலையே மிகவும் பிடித்த இடம் என்று சொன்னால் அது வீடு தான். இவர்கள் எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு தன்னுடைய வீட்டை தான் தேடுவார்கள். ஏனென்றால் தன்னுடைய வீட்டிற்கு வந்து ஓய்வெடுப்பதன் மூலம் அவர்கள் எந்த ஒரு மனக்கஷ்டத்தில் இருந்தாலும் அதிலிருந்து வெளிவந்துவிடுவார்கள்.
நண்பர்களின் வெற்றியை கண்டு இந்த ராசிக்காரர்கள் பொறாமை படுவார்களாம்..!
மீனம்:

மீன ராசிக்காரர்களின் கனவுலகம் வேறு மாதிரியும், நிஜ வாழ்க்கை வேறு மாதிரியும் இருக்க கூடும். இதனால் இவர்கள் மனதளவில் சோர்வாக இருக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு எப்போதும் தூங்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்கார்களுக்கு தூக்கம் தான் நிம்மதியை தரக்கூடியதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் யாரேனும் எப்போதும் தூங்கினார்கள் என்றால் நீங்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம், அதே சமயம் அவர்களை தூங்குமூஞ்சி என்று கூறவும் வேண்டாம். ஏனென்றால் இவர்களுக்கு தூக்கம் மட்டுமே மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் மனம் உடையும் போது தனக்கு ஆறுதல் யாரும் சொல்ல மாட்டார்களா என்று தேடுகிறார்கள். அது போல ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கையில் நிம்மதியை கொடுக்க கூடிய செயல்களை விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள். இதில் தூக்கமும் அடங்க கூடியதாக இருக்கிறது. இவர்கள் வேலை இல்லாத நேரத்தில் படுக்கறையில் தான் இருப்பார்கள். இவரக் கடின உழைப்பாளியாக இருப்பார்கள். மேலும் அதிக சிந்திக்க திறன் உடையவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களின் உடலானது சோர்வு நிலையை அடைவதால் தூங்கி கொண்டே இருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை பார்த்து பொறாமை பட மாட்டார்கள்..! இதில் உங்கள் ராசி இருக்கா..!
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |









