அட்சய திருதி அன்று தங்கம் வாங்க முடியாதவர்கள் இதை வாங்கினாலே செல்வ வளம் அதிகரிக்கும்..

Advertisement

அட்சய திருதியை 2023

பொதுவாக இந்தியாவில் கொண்டப்படும் பண்டிகைகளில் அட்சய திருதியும் ஒன்று. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை, அட்சய திருதியை திருநாளாகக் கொண்டாடுகின்றோம். அது போல இந்த ஆண்டு இந்த மாதம் 22-ம் தேதி வருகின்றது. இந்நாளில் அனைவரும் பல சுப காரியங்களை செய்வார்கள். பொதுவாக அட்சய திரிதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் நிலைத்து இருக்கும் என்பது அனைவரது நம்பிக்கை. எனவே அந்நாளில் தங்கத்தை வாங்கி வீட்டில் வைப்பார்கள். ஆனால் தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கும். அதனால் இந்த பதிவில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

அட்சய திருதியை அன்று இந்த பொருட்களை தானமாக கொடுத்தால் வீட்டில் செல்வம் பெருகும்..

அட்சய திருதியை பூஜை வழிபாடு:

அட்சய திருதியை பூஜை வழிபாடு

அட்சய திருதியை அன்று அதிகாலையிலே எழுந்து குளித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து விட்டு விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜையானது வாசனை உள்ள மலர்களை வைத்து மகாலக்ஷ்மியை வழிபட வேண்டும். பூஜையில் சிறிதளவு துளசி இலைகளை வைத்து வழிபட வேண்டும். மகாலஷ்மியையும். பெருமாளையும் அன்றைய நாள் வழிபட்டால் செல்வம் வளம் அதிகரிக்கும். மகாலக்ஷ்மிக்கு பிடித்த பால் பாயசம், கற்கண்டு போன்றவற்றை வைத்து பூஜை செய்ய வேண்டும். இதெல்லாம் முடியாதவர்கள் சர்க்கரையை மட்டும் வைத்து பூஜை செய்யலாம்.

அட்சய திருதியை அன்று மறந்தும் இதை மட்டும் செய்துவிடாதீர்கள்..!

தங்கம் வாங்க முடியாதவர்கள் வேற என்ன வாங்கலாம்:

தங்கம் வாங்க முடியாதவர்கள் வேற என்ன வாங்கலாம்

அட்சய திருதி அன்று தங்கம் வாங்கினால் பெருகி கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் அனைவராலும் வாங்க முடியுமா என்றால் வாங்க முடியாது என்பதே உண்மை.  இந்த நன்னாளில் தங்கம் வாங்காமல் சில பொருட்களை வாங்கினாலும் அதிஷ்டம் உண்டாகும். அதவது பருப்பு வகைகள், தானியங்கள். கீரை மற்றும் காய்கறிகள், நெய் போன்றவற்றை வாங்கினாலும் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.  

இந்த ஆண்டு அட்சய திருதியை எப்போது வருகிறது தெரியுமா?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement