தொட்டால் சிணுங்கி வீட்டில் வளர்க்கலாமா
தொட்டால் சிணுங்கி செடி என்பது காடுகளில் ஈரப்பதம் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு வளர் கூடியது. இவற்றை வீட்டில் பெரும்பாலானவர்கள் வளர்க்கணும் அப்படியெல்லாம் வளர்க்க மாட்டார்கள். அதுவாக வளர்ந்தால் தான் இந்த செடி. ஆனால் இதில் ஆன்மிகத்தில் உள்ள நன்மைகளை கேட்டால் உடனே வளர்ப்பீர்கள். சரி வாங்க ஆன்மிகத்தில் இந்த செடி வளர்க்கலாமா, இதனின் வாஸ்து பற்றியெல்லாம் இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
தொட்டால் சிணுங்கி செடி ஆன்முகத்தில் உள்ள நன்மைகள்:
தொட்டால் சிணுங்கி செடியானது ஆன்மிகத்தில் பல நன்மைகள் இருக்கிறது. இவை ஒரு மங்கள்கரமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் பணத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. வீட்டில் எப்பொழுதும் சண்டை இருந்து கொண்டே இருக்கிறது, இதிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் தொட்டால் சிணுங்கி செடியை வீட்டில் வளர்க்கலாம். இந்த செடியானது நம்முடைம் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி விட்டு நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்துகிறது.
உங்களுடைய வாழ்க்கையில் பண கஷ்டம் இருந்து கொண்டே இருக்கிறது. சம்பாதிக்கின்ற பணமானது இரட்டிப்பாக மாட்டிக்கிறது என்பவர்கள் தொட்டால் சிணுங்கி செடியை வளர்ப்பதன் மூலம் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
தொட்டால் சிணுங்கி செடியில் இருக்கும் பூவானது சனி பகவானுக்கு பிடித்த மலராக இருக்கிறது. அதனால் இந்த செடியானது வீட்டில் செல்வா நிலை உயருவதற்கு முக்கிய செடியாக இருக்கிறது.
கண் திருஷ்டி ஏற்படாமல் தடுக்க கூடிய சக்தி தொட்டால் சிணுங்கி செடி இருக்கிறது. மேலும் இந்த செடியை தினந்தோறும் தொட்டு கும்பிட்டு வந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.
வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்:
தொட்டால் சிணுங்கி செடியை வாஸ்து படி வீட்டில் வடகிழக்கு திசையில் நட வேண்டும். இப்படி நடுவதன் மூலம் வீட்டில் அதிஷ்டம் அதிகரிக்கும். வீட்டில் உள்ள கஷ்டம் மற்றும் பிரச்சனை போன்றவை நீங்கும். வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கிறது.
மேலும் ராகு தோஷம் இருக்கிறது என்றால் இந்த செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் அதனை இந்த தோஷம் நீங்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. மேலும் இதில் முக்கியமாக இந்த செடியில் காய்ந்த இலைகளை வைக்க கூடாது. காய்ந்த இலைகளை நறுக்கி விடுங்கள்.
எந்த திசையில் வைக்க கூடாது:
இந்த செடியை எக்காரணத்தை கொண்டு படுக்கையரைலோ அல்லது படுக்கரையின் பக்கத்திலோ வைக்க கூடாது. இப்படி வைப்பதன் மூலம் வீட்டில் தீய விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்பாக இருக்கும். உங்களின் தூக்கம் வராமல் ஏற்படுத்த கூடும். எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |