கனவில் துளசி செடி வந்தால் என்ன பலன்..?

Advertisement

கனவில் துளசி செடி வந்தால் என்ன பலன் | Thulasi Kanavil Vanthal Enna Palan

கனவு என்பது ஒவ்வொருவருக்கும் ஆழந்த உறக்கத்தில் இருக்கும் போது வருகிறது. அத்தகைய கனவுகளில் சிலவற்றை எதிர்காலத்திற்கு ஏற்றமாதிரியாகவும், மற்ற சிலவை இறந்த காலத்தில் நிகழ்ந்ததை உணர்த்தும் விதமாகவும் இருக்கிறது. அதிலும் சிலருக்கு என்ன கனவு என்று நியாபகம் இருக்கும். சிலருக்கு அதில் ஒன்று கூட நியாபகம் இல்லாமல் மறந்து போய்விடுகிறது. ஆனால் ஆன்மீகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது. அந்த வகையில் பெரும்பாலான வீடுகளில் துளசி செடியானது வளர்க்கப்படுகிறது. துளசி செடி ஆன்மீகத்திலும், ஆரோக்கியத்திலும் சிறந்த பேரினை கொண்டுள்ளது. ஒரு சிலருக்கு வீட்டில் இருக்கும் இந்த துளசி செடி கனவில் வரும். அதனால் இன்றைய பதிவில் துளசி செடி கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

வீடு கட்டுவது போல் கனவு வந்தால் என்ன பலன்..

துளசி செடி கனவில் வந்தால் என்ன பலன்:

உங்களுடைய தூக்கத்தில் துளசி செடி கனவில் வந்தால் அது நல்லது தான் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் துளசி செடியினை கனவில் காண்பதன் மூலமாக இறைவனின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைத்து வாழ்க்கையில் நல்ல மாற்றமும், மகிழ்ச்சியும் உண்டாகப் போகிறது என்பது அர்த்தமாக கூறப்படுகிறது.

மேலும் உங்களுடைய தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கனவில் துளசி மாலை வந்தால் என்ன பலன்:

அதுபோல துளசி மாலையினை பெருமாளுக்கு சூட்டுவது போல கனவு கண்டால் உங்களுக்கு தீங்கு நினைக்கும் மற்றும் தடங்கல்கள் செய்யும் நபர்கள் உங்களை விட்டு விலகி செல்ல போகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

துளசி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

கனவில் துளசியினை வாங்குவது போல் கனவு கண்டால் இதுநாள் வரையிலும் இருந்த கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் நல்ல நிலை வரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.

கனவில் துளசியினை பறிப்பது போல் கனவு கண்டால்:

உங்களுடைய வீட்டு தோட்டத்தில் மற்றும் மற்ற இடங்களில் துளசியினை பறிப்பது போல் கனவு கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மற்றும் யோகம் உண்டபோகிறது என்பது தான் அர்த்தம்.

துளசி செடி வாடி இருப்பது போல கனவு வந்தால்:

கனவில் துளசி செடி வாடி இருப்பது போல் வந்தால் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் மற்றும் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

கனவுகள் வருவதற்கு காரணம் என்ன தெரியுமா..

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement