துளசி இலையை பறிக்க கூடாத நாட்கள்
இந்துக்கள் வீட்டில் பெரும்பாலும் துளசி செடியை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவார்கள். இதனாலும் துளசி செடியை வைத்து வழிபடுவதும் சிறந்தது. மேலும் துளசி செடியை லட்சுமி தேவியின் உருவமாக பார்ப்பார்கள். பொதுவாக ஆன்மிகத்தில் ஒவ்வொன்றிற்கும் வாஸ்து சாஸ்திரம் இருக்கிறது. அதே போல் தான் துளசி செடிக்கும் வாஸ்து சாஸ்திரம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக வெள்ளி கிழமையில் அரிசி கொடுக்க கூடாது, பொழுது போன நேரத்தில் ஊசிகொடுக்க கூடாது என்றெல்லாம் கூறுவார்கள். அது போல தான் துளசி இலையை சில நாட்களில் மட்டும் பறிக்க கூடாது. அது என்ன நாட்கள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
துளசி இலை வாஸ்து சாஸ்திரம்:
ஆன்மிகத்தில் துளசி செடியானது வாழ்க்கையில் ஐஸ்வர்யத்தை தரும் கொடுப்பதாக நம்பப்படுகிறது. அதனால் துளசி செடியில் இலைகளை பறிக்க வேண்டும் என்றால் உடனே பறிக்க கூடாது, அதற்கான நாட்கள் பார்த்து பறிக்க வேண்டும். அது என்ன நாட்கள் என்று தெரிந்து கொள்வோம்.
துளசி இலைகளை ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளி போன்ற கிழமைகளில் துளசி இலைகளை பறிக்க கூடாது.
ஏகாதசி, பௌணர்மி, துவாதசி, அமாவாசை போன்ற நாட்களில் துளசி இலைகளை பறிக்க கூடாது.
குழந்தை பிறக்க போகும் வீடு மற்றும் இறந்தவர்களின் வீட்டில் துளசி இலைகளை பறிக்க கூடாது.
சூரிய வெளிச்சம் உள்ள நேரத்திலும், மறைய போகும் நேரத்திலும் கூட துளசி இலைகளை பறிக்க கூடாது.
நாம் குளிக்காமல் துளசி இலையை பறிக்க கூடாது, அசைவம் சாப்பிட்ருக்கும் போதும் சரி துளசி இலையை கட்டாயம் பறிக்க கூடாது.
துளசியை பறிப்பது எப்படி.?
துளசி செடியில் சில பேர் இலைகளை ஒவ்வொன்றாக பறிப்பார்கள், இது தவறானது.
அதவாது துளசி செடியில் உள்ள ஒரு கிளையை அப்படியே உடைக்க வேண்டும்.
துளசி செடியை வீட்டில் வளர்ப்பவர்கள் முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |