Masi Magam 2025 Tiruchendur Date and Time in Tamil | திருச்செந்தூர் மாசி திருவிழா எப்போது
முருகனின் அறுபடை வீடுகளாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி
பழமுதிர்ச்சோலை இருக்கிறது. இந்த ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனித்திறப்பும் வரலாறும் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் ஐந்து வீடுகள் மலை பகுதியில் அமைத்துள்ளது. இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவில் மட்டும் கடற்கரையில் அமைந்துள்ளது. இதற்கு கூடுதல் சிறப்புண்டு.
அதனாலே ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாசி மகம் மட்டுமின்றி பல்வேறு திருவிழாக்களும் இந்து மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். எனவே, திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணி ஆலயத்தில் இந்த ஆண்டு மாசி மகம் 2025 எப்போது எந்த நேரத்தில் நடைபெறுகிறது என்பதை இந்த பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
திருச்செந்தூர் முருகன் ராஜ அலங்காரம் நேரம் மற்றும் மற்ற பூஜைகள் நேரம்
Tiruchendur Masi Magam 2025| மாசி மகம் 2025 திருச்செந்தூர்:

| தேதி | கிழமை | திருவிழா |
| 03.03.2025 | திங்கட்கிழமை | மாசி உற்சவரம்பம் | மாசி திருவிழா கொடியேற்றம். |
| 07.03.2025 | வெள்ளிக்கிழமை | தீபாராதனை |
| 09.03.2025 | ஞாயிற்றுக்கிழமை | சிவப்பு சாத்தி |
| 10.03.2025 | திங்கட்கிழமை | பச்சை சாத்தி |
| 12.03.2025 | புதன்கிழமை | தேரோட்டம் |
| 13.03.2025 | வியாழன்கிழமை | தெப்பம் |
திருச்செந்தூர் மாசி திருவிழா:
- முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்று தான் மாசி மாதத்தில் நடைபெறும் மாசி திருவிழா. இது ஆண்டதோறும், மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- கொடியேற்றத்துடன் தொடங்கி சிவப்பு சாத்தி, பச்சை சாத்தி, தேரோட்டம் மற்றும் தெப்பம் என பல்வேறு நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும்.
- தினமும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்பாள் அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி தருவாள். பௌர்ணமியும் மகம் நட்சத்திரமும் கூடி வரும் நாளில் மாசி மகம் தேரோட்டம் நடைபெறுகிறது.
- அருணகிரியார் அவர்கள், திருச்செந்தூர் பற்றி அருமையாக கூறியிருக்கிறார். “கயிலை மலையனைய செந்திற்பதிவாழ்வே” என்று கூறியிருக்கிறார். அதாவது, திருச்செந்தூரில் வாழ்வது கயிலாய வாழ்விற்குச் சமமானது என்கிறார் அருணகிரியார் அவர்கள்.
- இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற திருச்செந்தூர் முருக பெருமான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தால் மனதிற்கு நிம்மதியையும் நிறைவையும் பெறலாம்.
- திருச்செந்தூர் முருகன் மோவிலில் ஆவணித்திருவிழா, ஐப்பசி மாதம் கந்த சஷ்டி திருவிழா, மாசி திருவிழா போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இவற்றில் மாசி திருவிழாவில் பெரிய தேரில் சுவாமியும், தெய்வானையும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு..!
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |












