Tiruchendur Soorasamharam 2024 Time in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். முருக பெருமான் சூரபத்மன் என்னும் அரக்கனை வீழ்த்தி வெற்றி பெற்ற நாளைத்தான் சூரசம்ஹாரம் என்று கொண்டாடி வருகிறோம். சூரபத்மன் என்னும் அரக்கன், சிவபெருமானை நோக்கி பெரும் தவம் புரிந்து, சாகா வரம் வாங்கினான். அதாவது, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் எனக்கு அழிவு வர வேண்டும் என்று கூறினான். அந்த வரத்தினை சிவபெருமான் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல், 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக கேட்டு பெற்றான்.
இந்த வரங்களை பெற்ற ஆணவத்தால், தேவர்கள், மக்கள் என அணைத்து உயிரினங்களையும் துன்புறுத்த தொடங்கினான் . சூரபத்மனின் கொடுமைகளை தாங்க முடியாமல், தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். அதற்கு பிரம்மன், சிவபெருமான் ஒருவனால் மட்டுமே அவனை அளிக்க முடியும் என்றும் கூறினார். உடனே, தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் முருகனை உருவாக்கினார். அதன் பிறகு, முருக பெருமான் சூரபத்மன் முதலான பல அசுரர்களை வதம் செய்தார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில்.
சூரசம்ஹாரம் என்றால் என்ன.? அது தோன்றிய வரலாற்று கதை என்ன.?
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நேரம் 2024:
- கந்த சஷ்டி விழாவின் ஆறாவது நாளான சூரசம்ஹாரம் விழா அனைத்து முருகன் ஆலயங்களிலும் மிகவும் விமர்சியாக கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக திருச்செந்தூரில் மிகவும் விமர்சியாக கொண்டாடப்படும்.
- திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நவம்பர் 07 (இன்று), 2024 மாலை, திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது.
- சூரசம்ஹாரம் முடிந்த பிறகு, சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் மாற்றி கொள்வார். இந்த நிகழ்வின்போது, திருச்செந்தூர் முழுவதும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் அதிக சத்தத்துடன் முழங்கப்படும்.
- திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடக்கும் போது மட்டுமே, முருகனுடைய ஆறுமுகங்களையும், 12 கரங்களையும் முழுவதுமாக தரிசிக்க முடியும். முக்கியமாக, சூரசம்ஹாரம் நடைபெறும் போது மட்டும், திருச்செந்தூரில் கடல் அலைகள் உள்வாங்கி அந்த இடமே அதிசயமாக காணப்படும்.
- சூரசம்ஹாரம் முடிந்து, மறுநாள் முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடைபெறும்.
- திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரம் விழாவினை காண்பதற்கு ஒவ்வொரு வருடமும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருவார்கள்.
சூரசம்ஹாரம் நாளில் செய்ய கூடாதவை.!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |