திருப்பதியில் உள்ள ஏழு மலைகளின் சிறப்புகள் பற்றி தெரியுமா.?

Advertisement

திருப்பதி ஏழு மலை சிறப்புகள்

பொதுவாக கோவில்களில் இருக்க கூடிய மரங்கள் அல்லது கடவுள் இருப்பதற்கு ஒவ்வொரு வரலாறு இருக்கும், அதோடுமட்டுமில்லாமல் அதற்கான சிறப்புகளும் இருக்கும். அதாவது எடுத்துக்காட்டாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமண பாக்கியம் இல்லாதவர்கள் காசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வந்தால் நல்லது நடக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. இவை அந்த கோவிலின் சிறப்புகளாக இருக்கிறது. அது போல திருப்பதி என்றால் நினைவிற்கு வருவது லட்டு தான். இவற்றில் ஏழு மலைகள் உள்ளன, ஒவ்வொரு மலைக்கும் ஒவ்வொரு பெயர் அதற்கான சிறப்புகளும் வேறுபடுகிறது. அதனை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க..

திருப்பதியில் உள்ள ஏழு மலைகளின் சிறப்புகள்:

வேங்கட மலை:

வேம் என்றால் பாவம், கட என்றால் நாசமாக்குதல் என்பது அர்த்தமாக இருக்கிறது. அதாவது நமது பாவங்களை நீக்க கூடிய மலையாக இருக்கிறது. இந்த மலையில் மகாவிஷ்ணு வெங்கடாஜலபதியாக காட்சி தருகிறார்.

சேஷ மலை:

ஆதிஷேசன் என்பது பெருமாளை அவதாரம், இவர் மலையாக அமைந்ததால் இந்த மலைக்கு சேஷ மலை என்று அழைக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தல வரலாறு

வேத மலை:

திருப்பதி ஏழு மலை பெயர்கள்

இந்த மலையில் வேதங்கள் தங்கி வெங்கடாஜலதியே பூஜித்ததாக கூறப்படுகிறது. அதனால் தான் இந்த மலைக்கு வேத மலை என்று பெயர் வந்தது.

கருட மலை:

ஏழுமலையானை வணங்க கருட பகவான் இங்கு வந்த போது வைகுண்டத்திலிருந்து ஏழுமலையானை எடுத்து வந்தார். இதனால் இந்த மலையை ‘கருட மலை’ என்று அழைக்கப்படுகிறது.

விருஷப மலை:

விருஷபன் (ரிஷபாசுரன்) என்கிற ஒரு அரக்கன் நரசிம்மரை நினைத்து கடும் தவத்தில் இருந்தார். அரக்கனுக்கு காட்சியளித்த நரசிம்மரிடம் ‘நான் உங்களுடன் சண்டையிட வேண்டும்’ என ரிஷபாசுரன் வரம் கேட்டார். ரிஷபாசுரன் நரசிம்மருடன் சண்டையிட்டு மோட்சம் பெற்றார் என்பதால் இந்த மலைக்கு ‘விருஷப மலை’ என்று அழைக்கப்படுகிறது.

அஞ்சன மலை:

அஞ்சனை என்பது ஆஞ்சனேயரின் தாயின் பெயராகும். இவர் தனக்கு குழந்தை வரம் வேண்டும் என்று தவமிருந்தார். அதன் பிறகு தான் குழந்தை வரம் கிடைத்தது. அதனால் தான் இந்த மலைக்கு அஞ்சன மலை என்ற என்று அழைக்கப்படுகிறது.

ஆனந்த மலை:

மகாவிஷ்ணு தலைமையில் ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் இருவருக்கிடையே போட்டி ஏற்பட்டது. போட்டியின் முடிவில் இருவரின் பலமும் சமமானது என தீர்ப்பு வந்தது. பிறகு இருவரும் மகிழ்ச்சியால் மிகவும் ஆனந்தமடைந்தனர். இதனால் தான் இந்த மலைக்கு ‘ஆனந்த மலை’ என்று அழைக்கப்படுகிறது.

சாரங்கபாணி கோவில் தல சிறப்புகள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement