2025 வைகுண்ட ஏகாதசி, திருப்பதி சொர்க்கவாசல் திறப்பு எப்போது.?

Advertisement

திருப்பதி சொர்க்கவாசல் திறப்பு 2025 நேரம் | Vaikunta Ekadasi 2025 Date and Time in Tamil

வாசகர்கள் அணைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2025 ஆம் ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி தேதி, வைகுண்ட ஏகாசதி சொர்க்க வாசல் திறப்பு நேரம் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். கலியுக வைகுண்டம் என போற்றப்படும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமாகவும் சிறப்பாகவும் நடைபெறுவது வைகுண்ட ஏகாதசி தான். மார்கழி மாதத்தில் இந்த விழா நடத்தப்படும். தொடர்ந்து 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி நடைபெறும்.

இந்த 10 நாட்களும் வைகுண்ட துவாரம் எனப்படும், சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் திறந்திருக்கும் அதன் வழியாக சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் இந்த 10 நாட்களும் அனுமதிக்கப்படுவார்கள். எனவே, இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி எப்போது வருகிறது என்பதையும், திருப்பதி சொர்க்கவாசல் எப்போது எந்த நேரத்தில் திறக்கும் என்பதையும் இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.

வைகுண்ட ஏகாதசி 2025 தேதி:

Vaikunta Ekadasi 2025 Date and Time in Tamil

2024 ஆம் ஆண்டில் வைகுண்ட ஏகாதசி கிடையாது. அதற்கு மாறாக 2025 ஆம் ஆண்டில் தான் இரண்டுவைகுண்ட ஏகாதசி வருகிறது. 2025 ஆம் ஆண்டில் ஜனவரி 10 ஆம் தேதி ( மார்கழி 26 ஆம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அதேபோல், 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது, வைகுண்ட ஏகாதசி ஆனது, டிசம்பர் 30 ஆம் தேதி (மார்கழி 15 ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது.

வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்க காரணம் என்ன தெரியுமா?

Tirupati Sorgavasal Thirappu 2025 Date and Time in Tamil:

 2024 ஆம் ஆண்டில் சொர்க்கவாசல் திறப்புகள் கிடையாது. அதற்கு மாறாக 2025 ஆம் ஆண்டு இரண்டு சொர்க்கவாசல் திறப்புகள் உள்ளன. 

2025 ஆண்டு முதல் சொர்க்கவாசல் திறப்பு | How Many Days Vaikunta Dwaram Will be Open in Tirumala in 2025 in Tamil :

 முதல் சொர்க்கவாசல் திறப்பு ஆனது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி (மார்கழி 26 ஆம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. ஏகாதசி திதி ஆனது, ஜனவரி  09.01.2025 அன்று பிற்பகல் 12:22 PM தொடங்கி ஜனவரி 10., 2025 அன்று காலை 10:19 மணியுடன் முடிவடைகிறது. தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் ஜனவரி 19 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.  

வைகுண்ட ஏகாதசியின்போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 25 நாட்கள் அத்யாயனோற்சவம் நடைபெறும். அதாவது, வைகுண்ட ஏகாதசி தினத்திற்கு 11 நாட்களுக்கு முன்பாகவே அத்யாயனோற்சவம் தொடங்கிவிடும். அதனால் இந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 30 -ம் தேதி துவங்கி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 23 -ம் தேதி வரை அத்யாயனோற்சவம் நடத்தப்பட உள்ளது.

2025 ஆண்டு இரண்டாம் சொர்க்கவாசல் திறப்பு: 

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது, வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு ஆனது, டிசம்பர் 30 ஆம் தேதி (மார்கழி 15 ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி அன்று காலை 07:50 AM  மணிக்கு தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி அன்று காலை 05:00 AM மணிக்கு ஏகாதசி திதி முடிகிறது.

ஏகாதசி அன்று இதை மட்டும் செய்து விடாதீர்கள்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement