Today Horai Timings in Tamil
புதிதாக தொழில் தொடங்குவதில் இருந்து எந்த ஒரு சுபகாரியமாக இருந்தாலும் அதை ஓரை பார்த்து தொடங்குமாறு நமது வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் இந்த ஓரை என்பது மாறிக்கொண்டே இருக்கும். இதில் சந்திர ஓரை, புதன் ஓரை, குரு ஓரை, சுக்ர ஓரை ஆகியவை சுப ஓரை என்றும், சூரிய ஓரை, செவ்வாய் ஓரை, சனி ஓரை ஆகியவை அசுப ஓரை என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் எந்த நாளில் எந்த நேரத்தில் எந்த ஓரை நிகழும் மற்றும் அதனுடைய நேரம் பற்றி கீழே உள்ள அட்டவணை (Today horai timings in Tamil) மூலம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஓரை என்றால் என்ன.?
ஜோதிடத்தில், ஒரு நாளில் உள்ள ஒவ்வொரு மணி நேரமும் ஹோரை எனப்படும். ஒரு நாளில் 24 ஓரைகள் இருக்கும். ஹோரை என்பதற்கு ஆதிக்கம் என்றும் பொருள் இருக்கிறது.
ஓரை நல்ல நேரம் அட்டவணை:
கிழமை | காலம் | 6 – 7 |
7 – 8 | 8 – 9 | 9 – 10 | 10 – 11 | 11 – 12 |
ஞாயிறு | பகல் | சூரியன் | சுக்ரன் | புதன் | சந்திரன் | சனி | குரு |
இரவு | குரு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | புதன் | சந்திரன் | |
திங்கள் | பகல் | சந்திரன் | சனி | குரு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் |
இரவு | சுக்ரன் | புதன் | சந்திரன் | சனி | குரு | செவ்வாய் | |
செவ்வாய் | பகல் | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | புதன் | சந்திரன் | சனி |
இரவு | சனி | குரு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | புதன் | |
புதன் | பகல் | புதன் | சந்திரன் | சனி | குரு | செவ்வாய் | சூரியன் |
இரவு | சூரியன் | சுக்ரன் | புதன் | சந்திரன் | சனி | குரு | |
வியாழன் | பகல் | குரு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | புதன் | சந்திரன் |
இரவு | சந்திரன் | சனி | குரு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | |
வெள்ளி | பகல் | சுக்ரன் | புதன் | சந்திரன் | சனி | குரு | செவ்வாய் |
இரவு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | புதன் | சந்திரன் | சனி | |
சனி | பகல் | சனி | குரு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | சனி |
இரவு | புதன் | சந்திரன் | சனி | குரு | செவ்வாய் | சூரியன் |
Today Horai Timings in Tamil | Tamil Horai Timings Today 2025:
பகல் ஹோரை |
இரவு ஹோரை |
||
ஹோரை | நேரம் | ஹோரை | நேரம் |
செவ்வாய் | 05:55 AM – 06:57 AM | சனி | 06:18 PM – 07:16 PM |
சூரியன் | 06:57 AM – 07:59 AM | வியாழன் | 07:16 PM – 08:15 PM |
வெள்ளி | 07:59 AM – 09:01 AM | செவ்வாய் | 08:15 PM – 09:13 PM |
புதன் | 09:01 AM – 10:03 AM | சூரியன் | 09:13 PM – 10:11 PM |
சந்திரன் | 10:03 AM – 11:05 AM | வெள்ளி | 10:11 PM – 11:09 PM |
சனி | 11:05 AM – 12:07 PM | புதன் | 11:09 PM – 12:07 AM |
வியாழன் | 12:07 PM – 01:09 PM | சந்திரன் | 12:07 AM – 01:05 AM |
செவ்வாய் | 01:09 PM – 02:11 PM | சனி | 01:05 AM – 02:03 AM |
சூரியன் | 02:11 PM – 03:13 PM | வியாழன் | 02:03 AM – 03:01 AM |
வெள்ளி | 03:13 PM -04:15 PM | செவ்வாய் | 03:01 AM – 03:59 AM |
புதன் | 04:15 PM – 05:16 PM | சூரியன் | 03:59 AM – 04:57 AM |
சந்திரன் | 05:16 PM – 06:18 PM | வெள்ளி | 04:57 AM – 05:55 AM |
சூரிய ஓரை பலன்கள்:
சூரிய ஓரையில் எந்த ஒரு நல்ல செயலையும் தொடங்க கூடாது. சூரிய ஓரை ஆனது நல்ல காரியம் செய்வதற்கு உகந்த நாளாக இருக்காது. இந்த நாளில் ஏதும் பத்திரங்கள் எழுதுவதற்கு உகந்த நாளாக இருக்காது. இந்த நாளில் ஏதாவது பொருட்கள் காணாமல் போனால் திரும்ப கிடைக்காது என்று ஆண்நமிகத்தில் கூறப்படுகிறது.
சந்திர ஓரை பலன்கள்:
சந்திர ஓரையானது நல்ல காரியங்களுக்கு ஏற்ற நாளாக இருக்காது. எந்த ஒரு சுப காரியங்களையும் செய்வதற்கு ஏற்ற நாளாக இருக்கிறது. இந்த நேரத்தில் கோவிலுக்கு செல்வது நல்லதாக இருக்கும்.
செவ்வாய் ஓரை பலன்கள்:
எந்த ஒரு நல்ல காரியத்தையும் செவ்வாய் ஓரையில் தொடங்கக் கூடாது. இருப்பினும் கோயில் தொடர்பான விஷயங்களையோ, சண்டை சச்சரவு காண பஞ்சாயத்துகளையோ இந்த நேரத்தில் பேசுவதற்கு ஏற்றதாக இருக்கும்.
புதன் ஓரை பலன்கள்:
புதன் ஓரை ஆனது னால காரியங்கள் செய்வதற்கு ஏற்றதாக இருக்கிறது. இந்த ஓரையில் கல்வி சம்மந்தபட்ட விஷயங்களை பற்றி பேசலாம்.
குரு ஓரை பலன்கள்:
குரு ஓரையில் விவசாயம் மற்றும் வியாபாரம் போன்ற விஷயங்களை இந்த ஓரையில் ஆரம்பிக்கலாம். எந்த ஒரு பொருளையும் வாங்குவதற்கோ, விற்பதற்கோ உடன நேரமாக இருக்கிறது. அதாவது ஆடை, நகைகள், வீடு, மனை, வாகனங்கள் போன்றவை வாங்குவதற்கு ஏற்ற நேரமாக இருக்கிறது.
சுக்கிர ஓரை பலன்கள்:
நல்ல விஷயங்கள் செய்வதற்கு சுக்கிர ஓரை சிறந்ததாக இருக்கிறது. நீங்கள் புதிதாக ஏதும் வாங்க நினைத்தாலும் இந்த நேரத்தில் வாங்கலாம்.
சனி ஓரை பலன்கள்:
சனி ஓரையில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்க கூடாது. சட்டம் சம்மந்தப்ட்ட விஷயங்களில் முடிவெடுப்பதில் நன்றாக யோசித்து எடுக்க வேண்டும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |