இன்றைய ராசி பலன்கள் 2025 | Indraya Rasi Palan 2025 | Today Rasi Palan 2025 in Tamil
Indraya Rasipalan Tamil Language :- இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள நாம் பொதுவாக ராசி பலன் பார்ப்போம். அவ்வாறு ராசி பலன் பார்த்து அதற்கு ஏற்றது போல் நாம் முன் எச்சரிக்கையாக இருந்தால், நினைத்த செயல்கள் வெற்றி பெறும். அதாவது கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் இன்று எப்படி நடந்து கொள்ள வேண்டும், தங்களுக்கான ராசி பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் இங்கு மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
| இன்றைய நாள் எப்படி | இன்றைய நல்ல நேரம் தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்து படிக்கவும்..! | Indraya Naal Eppadi in Tamil |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
மேஷம் ராசி பலன் இன்று:

இன்றைய நாள்:
மேஷம் ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு நல்ல நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகள் ஆனது குறைவாக காணப்படும். இதனை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டும், கவனமாகவும் செய்தால் பணியை சிறப்பாக செய்து முடிக்க முடியும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அன்பாக நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியும். இன்று பணவரவு ஆனது அதிகமாக காணப்படும். இதன் மூலம் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. இதன் மூலம் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.
| நாளைய ராசி பலன்கள் |
ரிஷபம் ராசி பலன் இன்று:

இன்றைய நாள்:
ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் நீங்கள் அமைதியை கையாள வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் பேசும் வார்த்தைகள் உங்களுக்கே பிரச்சனையை கொடுக்க கூடும். பணியிடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இதன் மூலம் உங்களின் உயர் அதிகாரியிடம் பாராட்டை பெறுவீர்கள். துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். இதன் மூலம் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு ஆனது அதிகமாக காணப்படும். இதன் மூலம் உங்களின் சேமிப்பினை அதிகப்படுத்துவீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. இதன் மூலம் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.
மிதுன ராசி பலன் இன்று:

இன்றைய நாள்:
மிதுன ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு உகந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகள் சம்மந்தமாக வெளியூர் செல்வீர்கள். இதில் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். துணையிடம் நேர்மையாக இருப்பீர்கள். இதன் மூலம் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பணவரவு ஆனது அதிகமாக காணப்படும். இதன் மூலம் உங்களின் சேமிப்பினை அதிகப்படுத்துவீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். இன்று கால்வலி போன்ற பிரச்சனைகள் வரக் கூடும். இதனை தவிர்க்க யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு நல்ல பலனை தரும்.
கடக ராசி பலன் இன்று:

இன்றைய நாள்:
கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பணியிடம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இதன் மூலம் பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து காட்டுவீர்கள். இதனை கண்டு மேல் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். துணையிடம் வெளிப்படையாக பேசுவீர்கள். இதன் மூலம் துணையை பற்றி புரிந்து கொள்வீர்கள். இன்று பணவரவு ஆனது அதிகமாக காணப்படும். இதன் மூலம் உங்களின் சேமிப்பினை அதிகப்படுத்துவீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
சிம்மம் ராசி பலன் இன்று:

இன்றைய நாள்:
சிம்ம ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாகஇருக்காது. நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பரை சந்திப்பீர்கள். பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. இதனை கண்டு மேல் அதிகாரிகள் உங்களை கண்டிக்க நேரிடும். துணையிடம் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அவ்வப்போது விட்டு கொடுத்து சென்றால் தான் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியும். பணவரவு ஆனது குறைவாக காணப்படும். இதனால் அன்றைய நாள் செலவுகளை சமாளிப்பதற்கு போதிய அளவு பணம் இல்லாததால் சிறிய கடன் தொகை வாங்குவீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது . இதனால் மகிழ்ச்சியாக பொழுதை இருப்பீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
.
கன்னி ராசி பலன் இன்று :

இன்றைய நாள்:
இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு நல்ல பலனை தரும். பணியிடத்தில் பணிகள் ஆனது அதிகமாக இருந்தாலும் பணியை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து காட்டுவீர்கள். இதனை கண்டு மேல் அதிகாரிகள் பாராட்டுவார்கள். துணையிடம் மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்துவீர்கள். இதன் மூலம் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு ஆனது அதிகமாக காணப்படும். இதன் மூலம் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். பிள்ளைகள் ஆசைப்பட்டதை வாங்கி தருவீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
துலாம் ராசி பலன் இன்று :
இன்றைய நாள்:
துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டும், கவனமாகவும் செய்ய வேண்டும். துணையிடம் அன்பாக நடந்துகொள்வீர்கள். இதன் மூலம் உங்களுக்குள் நல்லுறவை பராமரிக்க முடியும். பணவரவு ஆனது அதிகமாக இருக்கும். இதனால் உங்களின் சேமிப்பு திறன் அதிகமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் தொடை வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம் ராசி பலன் இன்று:

இன்றைய நாள்:
விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. இன்றைய நாள் எந்த செயல் செய்தாலும் அதனை கவனமாகவும், பொறுமையாகவும் செய்ய வேண்டும். பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். துணையிடம் மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்துவீர்கள். இதன் மூலம் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஆனது அதிகமாக காணப்படும். இதன் மூலம் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். நீங்கள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
தனுசு ராசி பலன் இன்று:

இன்றைய நாள்:
தனுசு ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் பணிகள் ஆனது அதிகமாக இருப்பதால் உங்களின் கவனக்குறைவு காரணமாக குறித்த நேரத்தில் பணியை செய்து முடிக்க முடியாது. துணையிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியும். இன்று பணவரவு ஆனது குறைவாக காணப்படும். இதன் மூலம் அன்றைய நாள் செலவுகளை சமலைப்பதற்கே சிறியதாக கடன் வாங்குவீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் உங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
மகர ராசி பலன் இன்று:

இன்றைய நாள்:
இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்திற்கு முடிப்பதற்கு திட்டமிட்டும் , கவனமாகவும் செய்வதன் மூலம் சிறப்பாக செய்து முடிக்க முடியும். துணையிடம் மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்துவீர்கள். இதன் மூலம் இருவரும் மகிச்சியாக பொழுதை கழிப்பீர்கள். இன்று பணவரவு ஆனது அதிகமாக காணப்படும். ஆனால் அதற்கான செலவுகள் அதிகமாக இருக்க கூடும். இதனால் உங்களுக்கு கவலைகள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் தொண்டை வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் குளிர்ச்சியான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கும்ப ராசி பலன் இன்று :

இன்றைய நாள்:
கும்ப ராசிக்காரர்களே இன்றைய நாள் பொறுமையை கையாள வேண்டும். அப்போது தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். பணியிடத்தில் பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பணிகளை கவனமாகவும், திட்டமிட்டும் செய்ய வேண்டும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் நேரத்தை செலவிட வேண்டும். இன்று பணவரவு ஆனது அதிகமாக காணப்படும். உங்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மீன ராசி பலன் இன்று:

இன்றைய நாள்:
மீனம் ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உங்களுக்கு வெற்றிகள் வந்து சேரும். பணியிடத்தில் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதனால் மேல் அதிகாரியிடம் பாராட்டை பெறுவீர்கள். இதன் மூலம் உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. துணையிடம் மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்துவீர்கள். இதன் மூலம் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியும். பணவரவு ஆனது அதிகமாக இருக்கும். இதன் மூலம் உங்களின் சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். உங்களின் வங்கி சேமிப்புதிறன் அதிகமாக இருக்க கூடும். உங்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

























