பரணி நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி.! நவம்பர் மாதம் வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை.!

Advertisement

குரு பெயர்ச்சி பலன்கள் 2023

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அதாவது ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும். கிரகங்களின் பெயர்ச்சியால் 12 ராசிகளின் நிலை மாறிக்கொண்டே இருக்கும். இது ஒரு சில ராசிகளுக்கு நற்பலன்களையும் ஒரு சில ராசிகளுக்கு மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தேவ குருவாக கருதப்படும் வியாழன் ஜூன் மாதம் 21 ஆம் தேதி பரணி நட்சத்திரத்தில் பெயர்ச்சியடைந்து உள்ளது. இவர், நவம்பர் 27 ஆம் தேதி வரை பரணி நட்சத்திரத்தில் சஞ்சரித்து இருப்பர். இதனால் நவம்பர் மாதம் வரை இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. எனவே, அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் அந்த 5 ராசிக்காரர்கள் யாரென்று இப்பதிவில் பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசிக்காரர்கள்:

மகர ராசி:

மகர ராசி

பரணி நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சியின் காரணமாக மகர ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட பலன்களை பெறுவார்கள். இதனால், பணிபுரியும் இடத்தில் மரியாதையும் பாராட்டும் அதிகரிக்கும். அரசு வேளையில் பணியாற்றி வருபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல், உயர் அதிகாரியிடம் நற்பெயர் பெறுவீர்கள். கல்வி துறையில் இருப்பவர்களுக்கு  இக்காலத்தில் நற்பலன்கள் வந்து சேரும்.

புதன் சுக்கிரன் சேர்க்கையில் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரவங்க இவங்க தானா..!

துலாம் ராசி:

துலாம் ராசி

குருவின் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் முன்னேற்றமான பலன்களை பெறுவார்கள். இக்காலத்தில் புதிய வாய்ப்புகள் உங்களை வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சுயதொழில் செய்பவர்களுக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

மேஷ ராசி:

மேஷ ராசி

குருவின் நட்சத்திர மாற்றம் மேஷ ராசிக்கார்களுக்கு நற்பலன்களை அளிக்கும். தோளில் செய்பவர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எனவே, மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் வரை பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

தனுசு ராசி:

தனுசு ராசி

பரணி நட்சத்திரத்தில் குரு சஞ்சரிப்பதால், தனுசு ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறுவார்கள். இக்காலத்தில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலை விரிப்படுத்த நல்ல வாய்ப்புகள் உண்டாகும். மேலும், வருமானமும்அதிகரிக்கும்.

புதன் பெயர்ச்சியால் ஜூலை 08 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகம்..!

சிம்ம ராசி:

சிம்மம் ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் திடீர் பணவரவு ஏற்படும். இக்காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் அதிஷ்ட பலன்களை பெறுவார்கள். சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. தொழிலில் முன்னேற்றமான பலன்களை பெறுவார்கள். அரசு வேளையில் இருப்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement