சனி, ராகு, கேது பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு கஷ்டகாலம் வரப்போகிறது..!

Advertisement

Rahu Ketu Peyarchi Palangal 2023

நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும். அப்படி ராசிகள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது அவற்றின் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். அதாவது கிரகங்களின் பெயர்ச்சியால் ஒரு சில ராசிகள் நற்பலன்களையும் ஒரு சில ராசிகள் மோசமான பலன்களையும் பெரும். எனவே, அந்தகையில் ஜூன் 17 -ஆம் தேதி சனிபகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சியடைய உள்ளார். அதுமட்டுமல்லாமல், இதனை தொடர்ந்து மேஷத்தில் ராகுபகவான் பிற்போக்கு பெயர்ச்சியும், துலாம் ராசியில் கேதுபகவான் பிற்போக்கு பெயர்ச்சியும் அடைய உள்ளார்கள். எனவே சனி, ராகு மற்றும் கேது 6 மாதங்கள் வக்கிர பெயர்ச்சியில் இருப்பதால் சில ராசிகாரர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டங்கள் அதிகரிக்கக்கூடும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. எனவே அந்த ராசிக்காரர்கள் யாரென்று இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சனி, ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு கஷ்டகாலம்:

சிம்ம ராசி:

சிம்ம ராசி

சனி, ராகு, கேது பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிக பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் செய்யும் வேலையை மந்தமாக செய்வீர்கள். அதுமட்டுமல்லாமல் இக்காலத்தில் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். ஏனென்றால் இக்காலத்தில் நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எந்தவொரு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும் நன்கு யோசித்து எடுக்க வேண்டும். இல்லையென்றால் பல சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். இதனால் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

ஒரு வருடத்திற்கு பிறகு மிதுனத்திற்கு செல்லும் புதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் அடிக்கப்போகுது..!

விருச்சிக ராசி:

விருச்சிகம்

இந்த 3 கிரகங்களின் பிற்போக்கு பெயர்ச்சியானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்த உள்ளது. மற்றவர்களுடன் கூட்டாக சேர்ந்து எந்த தொழிலையும் செய்ய வேண்டாம். மேலும் நீதிமன்ற வழக்கு சம்மந்தப்பட்ட பேப்பரில் கையெழுத்திடும்போது கவனமாக இருப்பது நல்லது. இல்லையென்றால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கடக ராசி:

கடக ராசி

சனி, ராகு மற்றும் கேதுவின் பிற்போக்கு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறிது நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு வேலை சுமை அதிகரித்து காணப்படும். இதனால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல், வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். மேலும் இக்காலத்தில் பண நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை வீண்செலவு செய்வதை தவிர்க்கவும்.

சனி செவ்வாய் கிரகத்தால் இந்த ராசிக்காரவங்க படாத பாடு படப்போறாங்களாம்..! கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கப்பா..!

மீன ராசி:

மீன ராசி

இந்த 3 கிரகங்களின் பெயர்ச்சியால், மீன ராசிக்காரர்களின் உடல்நலம், உறவுகள் மற்றும் நிதிநிலைமை எதிர்மறையாக இருக்கும். இக்காலத்தில் மீன ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் நாள்பட்ட உடல்நிலை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் பேசும் பேச்சிலும் நடத்தையிலும் பொறுமையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பல பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement