கும்பத்தில் உருவாகும் சனிப்பெயர்ச்சி
வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம் அனைவருக்குமே ஆன்மீகத்தில் அதீத நம்பிக்கை இருக்கும் அல்லவா..! அதுபோல ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் ஒவ்வொரு ராசியிலும் கிரகங்களின் மாற்றம் ஏற்படும். அதை தான் நாம் சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என்று சொல்கின்றோம். அதுபோல 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பத்தில் சனிப்பெயர்ச்சி உருவாக போகிறது. அதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டப்போகிறது. அது எந்தெந்த ராசிகள், அதில் உங்கள் ராசி இருக்கிறதா என்று பார்க்கலாம் வாங்க..!
ரிஷப ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது |
கும்பத்தில் உருவாகும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்..!
ஆன்மீகத்தில் சனி பகவானை நீதியின் கடவுள் என்று அழைக்கின்றோம். அதுபோல 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் தனது ராசியான கும்பத்தில் இடப்பெயர்ச்சி அடைந்தார். இனி 2025 வரை இந்த ராசியில் இருப்பார்.
எனவே சனிபகவானின் இந்த ராசி மாற்றத்தால், சில ராசிக்காரர்களுக்கு பண வரவு, பல வகையாக அதிர்ஷ்டம் கிடைக்க போகிறது. அந்த ராசிகளை பற்றி இங்கு காணலாம்.
ரிஷப ராசி:
சனி கும்ப ராசியில் நுழைவதால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு பல நன்மைகளை அளிக்கப்போகிறது. ரிஷப ராசியில் பிறந்தவர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். வருமானமும் அதிகமாக காணப்படும். இந்த காலம் உங்களுக்கு ஒரு நல்ல காலமாக இருக்கும்.
இரு கிரகங்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு இணைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழிய போகிறது |
துலாம் ராசி:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் சஞ்சாரம் நல்ல பலன்களை அள்ளி தரப்போகிறது. இதுவரை உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். நீங்கள் செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதுபோல உங்கள் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த் காலத்தில் பணவரவு அதிகமாக காணப்படும்.
மிதுன ராசி:
கும்ப ராசியில் உருவாகும் சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு இந்த காலம் மகிழ்ச்சி நிறைந்த காலமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வேலை செய்பவர்களின் சம்பள உயர்வுடன், பதவி உயர்வு கிடைக்கும். லாபம் அதிகமாக கிடைக்கும் காலம் இது தான்.
குரு பெயர்ச்சியினால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது இத்தல உங்க ராசி இருக்கா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Aanmeega Thagaval in Tamil |