வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சனி, சுக்கிரன், புதன் 100 ஆண்டுக்கு அப்புறம் சேர்க்கை இதனால் எந்த பக்கம் போனாலும் பணம் வரும்..

Updated On: April 16, 2025 12:40 PM
Follow Us:
Trigraha Yoga will increase the income of 3 zodiac signs in tamil
---Advertisement---
Advertisement

திரிகிரக யோகம்

பொதுவாக ஆன்மிகத்தில் ஒவ்வொரு கிரகமும் தங்களின் ராசிகளை குறிப்பிட்ட நாளுக்கு மாற்றி கொள்ளும். இப்டி பெயர்ச்சி அடையும் நன்மை, தீமை என இரண்டுமே நடக்கும். அந்த வகையில் மீன ராசியில் சனி, சுக்கிரன் மற்றும புதனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது 100 ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ளது. இதனின் தாக்கமானது 12 ராசிகளிலும் காணப்பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்க போகிறது அவை, எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

மிதுனம்:

திரிகிரக யோகம்

மிதுன ராசியில் 10-வது வீட்டில் சனி, சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கை நடந்துள்ளது. இவை மூன்றும் இணைந்ததால் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதன் மூலம் மிதுன ராசிக்காரர்கள் அலுவலகங்களில் முன்னேற்றம் ஏற்படும். மேலும் பணியில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். நீங்கள் நிதி சம்மந்தமாக எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். பனாவரவு அதிகமாக கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களுக்கு தந்தைக்கும் ஏதேனும் இதுவரை பிரச்சனை இருந்து பேசாமல் இருந்தீர்கள் என்றால் இந்த காலத்தில் நீங்கள் இருவரும் மனம் விட்டு பேசுவீர்கள். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு ஆசைப்பட்ட வேலை கிடைக்கும்.

2025 தமிழ் புத்தாண்டால் இந்த ராசிக்காரர்கள் வீட்டில் பணமழை பொழிய போகுதாம்

கும்பம்:

கும்ப ராசியில் 2-வது வீட்டில் சனி, சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை நடந்துள்ளது. உங்களின் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பணியிடம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இதனை நீங்கள் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டால் வெற்றியை அடைய முடியும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் வியாபாரம் நன்றாக பெருகும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். ஏதேனும் பணம் நிலுவையில் இருந்தால் அவை முடிவுக்கு வரும்.

தனுசு:

திரிகிரக யோகம்

தனுசு ராசியில் 4-வது வீட்டில் திரிகிரக யோகம் நடந்துள்ளது. இந்த யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கபோகிறார்கள். இந்த நேரத்தில் நீங்கள் புதிய சொத்துக்கள் அல்லது வாகனம் வாங்குவீர்கள். உங்களுடைய பரம்பரை சொத்துக்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவை இப்போது முடிவுக்கு வரலாம். உங்களின் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவை தீர்ந்து நல்லுறவை பராமரிப்பீர்கள். உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றியை காண்பீர்கள். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். திருமணம் ஆனவர்கள் தங்களின் துணையை மகிழ்ச்சியாக விட்டு கொள்வார்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now