திரிகிரஹி யோகம் 2025 | Trigrahi Yoga 2025
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2025 ஆம் ஆண்டில் நடக்கும் திரிகிரஹி யோகத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எது என்பதை கொடுத்துள்ளோம். ஜோதிடத்தின்படி மூன்று கிரகணங்கள் ஒரு ராசியில் இணையும்போது திரிகிரஹி யோகம் உருவாகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி மீன ராசியில் புதன் நுழைய உள்ளதால் திரிகிரஹி யோகம் உருவாகிறது. அதாவது, தற்போது, மீன ராசியில் ராகு கிரகம் உள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 27 ஆம் தேதி புதன் கிரகம் மீன ராசிக்குள் நுழைகிறது. அதனை தொடர்ந்து, சூரியன் மார்ச் 14 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைய உள்ளது. இந்த மூன்று கிரகங்களும் மீன ராசியில் ஒரு சேருவதால் திரிகிரஹி யோகம் ஏற்ப்படும். இந்த திரிகிரஹி யோகம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டத்தை மட்மே அளிக்கப்போகிறது. அப்படி அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
Trigrahi Yoga 2025 Will be Formed in Pisces After 18 Years the Luck for These 3 Zodiac Signs in Tamil:
மீன ராசி:
திரிகிரஹி யோகம் மீன ராசியின் லக்னத்தில் உருவாகுவதால் மீன ராசிக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்க போகிறது. இந்த காலம் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் மற்றும் முதலீடு போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலனை பெற்று தரும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திரிகிரஹி யோகம் மீன ராசியில் நிகழ்வதால் மீன ராசிக்காரர்களுக்கு இக்காலம் மங்களகரமானதாக இருக்கும்.
உங்க வீட்டு கதவை திறந்து வைங்க அதிர்ஷ்டம் வர போகிறது.. யார் யாருக்கு தெரியுமா.?
மிதுன ராசி:
மிதுன் ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் நல்ல பலன்களை அளிக்கும். இக்காலத்தில் உங்களுக்கு அனைத்திலும் வெற்றி வாய்ப்புகள் வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் அல்லது பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு பயணங்கள் ஏற்படும். இது உங்களுக்கு நற்பலன்களை அளிக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். மேலும், உங்கள் கடின உழைப்பின் மூலம் சலுகை அல்லது ஊக்கத்தொகை வகையில் பணம் வரும்.
மீனத்தில் சனியும் ராகுவும் சேர்வதால் இந்த 5 ராசிகளுக்கு கஷ்ட காலம் தான்.!
சிம்ம ராசி:
மீன ராசியில் உருவாகும் திரிகிரஹி யோகம், சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும். சிம்ம ராசியின் எட்டாவது வீட்டில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. இதனால் சிம்ம ராசிக்காரர்களின் வேலை மற்றும் தொழிலில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். ஒரு சிலர் தொழிலை விரிவுபடுத்துவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருகும். இதனால் லாபம் உண்டாகும். உடல் நிலை சரியில்லாதவரகளுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். எனவே, அனைத்து விதத்திலும் சிம்ம ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் நன்மையை அளிக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |