திரிகிரஹி யோகம்
பொதுவாக நம்மில் பலருக்கும் ஜோதிட சாஸ்திரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அதனால் நாம் அதில் கூறும் அனைத்தையும் நம்புவோம். அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களும் நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கின்றது. அவற்றால் தான் நமது வாழ்க்கை இயக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. அதனால் நவகிரகங்கள் தங்களது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றம் செய்தால் நமது வாழ்க்கையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் நவம்பர் 17-ம் தேதி சூரியன் விருட்சக ராசிக்கு இடம்பெயருகிறார். அப்போது விருட்சக ராசியில் புதன் மற்றும் செவ்வாய் இருப்பதால் திரிகிரஹி யோகம் உருவாகிறது. இந்த ராஜயோகத்தை பலன் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் கிடைக்கும். ஆனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு கூடுதலான பலன்கள் கிடைக்கும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதையெல்லாம் பற்றி விரிவாக இன்றைய பதிவில் காணலாம் வாங்க..
Trigrahi Yogam Rasi Palangal in Tamil:
திரிகிரஹி யோகத்தால் அதிர்ஷ்டக்காரர்களாக மாறப்போகும் 7 ராசிக்காரர்கள்:
விருட்சக ராசியில் சூரிய பகவானின் பார்வையும் அதே சமயம் புதன் மற்றும் செவ்வாய் கிரகணங்கள் விருட்சக ராசியில் இருப்பதால், சூரியன்-செவ்வாய் இணைவு தவிர, சூரியன்-புதன் புதாதித்ய யோகமுன் நவம்பர் 1 அன்று உருவாகிறது. இந்த திரிகிரஹி யோகம் 7 ரசிகர்களுக்கு மங்களகரமான நம்மைகளை வழங்குகிறது.
7 ராசிக்காரர்கள்:
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த திரிகிரஹி யோகமனது நீங்கள் நினைத்து பார்க்காத அளவிற்கு அதிர்ஷ்டத்தை அளிக்க போகின்றது. அதாவது இந்த காலகட்டத்தில் நீங்கள் செல்வத்தை சேர்க்க போகிறீர்கள்.
பணியிடத்தில் உயர் பதவி, சம்பள உயர்வு உள்ளிட்டவைகள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் மற்றவர்களிடத்தில் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சிக்கல்கள் விலகும். இது உங்களுக்கு வர பிரசாத காலமாகும்.
கடகம்:
கடக ராசிக்கார்களுக்கு நவம்பர் 17 முதல் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் சாதகமாவே அமையும். அதேபோல் வியாபாரத்தில் உங்களுடைய முதலீட்டை காட்டிலும் வருமானம் அதிகரிக்கும்.
மேலும் பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் சிறப்பானதாக அமையும். அதோடு மட்டும் இல்லாமல் இத்தகைய உதயம் உங்களது வேலையை சிறப்பாக மாற்றிக்கொடுக்கும் விதமாக உள்ளது.
சிம்மம்:
சூரிய பகவான் நேரடியாக விருட்சகத்தில் சஞ்சரிப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனை இருந்தால் அவை நீங்கும். உங்களின் உடன் பிறந்தவர்கள் உங்களின் எல்லா செயல்களுக்கும் பக்க பலமாக இருப்பார்கள். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் ஆதாயம் கிடைக்கும். மேலும் அனுமானின் மந்திரத்தை மாலை நேரத்தில் சொல்வது நல்லது.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இதுநாள் வரையிலும் இல்லாத பல சாதகமான பலன்கள் இருக்கும். மேலும் பொருளாதார நிலை மற்றும் பதவி உயர்வுகள் என இதுபோன்ற வெற்றிகள் அனைத்தும் இந்த சனி பகவான் உதயத்தால் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
குடும்பத்தில் ஒற்றுமையும், ஆரோக்கியமும் மேலோங்கி இருப்பதனால் மகிழ்ச்சி தானகவே கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் எந்த விஷயத்திலும் கவனம் தேவை. உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாட்களாக வரும்நாட்கள் இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நிலுவையில் உள்ள பணிகள் உங்களுக்கு சாதகமாக முடியும். நிதி மேலாண்மை அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக ஏதிர்பார்த்த பயணம் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். உங்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனை முறியடித்து முன்னேறுவதால் இது யோகமான காலமாக இருக்கும்.
மகரம்:
சூரிய பகவான் நேரடியாக சஞ்சரிப்பது மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இதுவரை உங்கள் வராத தொகை கைக்கு கிடைக்கும். மேலும் செல்வ நிலை அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். சனி பகவானுக்கு விளக்கேற்றி பூஜை செய்யுங்கள்.
மீனம்:
இந்த திரிகிரஹி யோகத்தால் மீன ராசிக்காரர்களுக்கு, அதிக வாய்ப்புகள் தேடி வரும். இக்காலத்தில் நீங்கள் சிறப்பாக முடிவெடுத்து வேலை, புகழ் என அனைத்திலும் சிறந்து விளங்குவீர்கள்.அதுமட்டுமில்லாமல், நவம்பர் 17 முதல் நிலம் மற்றும் சொத்து சம்மந்தப்பட்ட விசயங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரவும் வாய்ப்புள்ளது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |