வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

துளசி செடியை வீட்டில் வளர்ப்பவர்கள் முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..!

Updated On: September 25, 2023 12:39 PM
Follow Us:
tulasi sedi vastu in tamil
---Advertisement---
Advertisement

Tulasi Sedi Vastu in Tamil

பொதுவாக ஒவ்வொரு சுபநிகழ்ச்சியினை செய்வதற்கு முன்பாகவும் நல்ல நாள் எது என்பதை பார்த்து தான் செய்வார்கள். அதிலும் குறிப்பாக திருமணம் மற்றும் வீடு குடி போகும் விழா என்றால் கட்டாயமாக அதிக முக்கித்துவம் கொடுத்து நல்ல நாளினை பார்பார்கள். அந்த வகையில் பெரும்பாலும் வாஸ்து நாட்களில் புது வீடு குடிபோவது நல்லது என்று கூறுவார்கள். ஏனென்றால் நாம் மட்டும் இல்லாமல் நம்முடைய தலைமுறையினரும் வசிக்கும் இந்த வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வீடுகளில் பூச்செடிகளை வளர்க்கும் போது துளசி செடியினையும் வளர்த்து வருவார்கள். துளசி செடியினை பொறுத்தவரை மருத்துவ குணங்கள் எப்படி நிறைந்து இருக்கிறதோ, அதே அளவிற்கு அதில் ஆன்மீக குறிப்புகளும் உள்ளது. ஆகையால் வாஸ்துப்படி துளசி செடி வீட்டில் வைப்பதனால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம் வாங்க..!

துளசி செடி வீட்டில் வளர்க்கலாமா..?

நம்மில் பலருக்கு வீட்ல துளசி செடியினை வளர்க்கலாமா..? என்ற சந்தேகம் இருக்கிறது. ஆகவே நமது வீட்டில் தாராளமாக துளசி செடியினை வளர்க்கலாம். மேலும் இதனை வளர்ப்பதன் மூலம் நமக்கு ஆரோக்கியம் ரீதியாகவும் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

துளசி செடி வாஸ்து பயன்கள்:

 துளசி செடி வீட்டில் வளர்க்கலாமா

  • துளசி செடியினை நமது வீட்டில் வளர்ப்பதன் மூலம் மன அழுத்தம் எதுவும் இருக்காது. அதேபோல் குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து காணப்படும்.
  • இந்த செடியினை வீட்டில் வைப்பதன் மூலம் மனதில் எதிர்மறை ஆற்றல்கள் எதுவும் இருந்தாலும் அவற்றை எல்லாம் நீங்கி நேர்மறை எண்ணங்கள் உண்டாகும்.
  • மேலும் கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்சைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு என இத்தகைய தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் நச்சுக்களை காற்றில் இருந்து உறிஞ்சும்.
  • வீட்டிற்கு மன அமைதியினை அளிக்கும்.

துளசி செடி இருக்கும் இடத்தில் செய்யக்கூடாதவை:

  • ககுப்பை தொட்டி வைக்கக்கூடாது
  • செருப்புகளை அருகில் வைக்கக்கூடாது.
  • வெயில் இல்லாத இடத்தில் நடவு செய்யக்கூடாது.

துளசி செடி எந்த திசையில் வைக்க வேண்டும்:

துளசி செடி எந்த திசையில் வைக்க வேண்டும்

வாஸ்துப்படி துளசி செடியினை வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் மட்டும் நடவு செய்ய வேண்டும். சுத்தமான தண்ணீரை மட்டுமே இதற்க்கு கொடுக்க வேண்டும். அதற்கு மாறாக துணி துவைக்கும் மற்றும் பாத்திரம் கழுவும் தண்ணீரை ஊற்றக்கூடாது.

சரியாக 7 வாரத்தில் கடன் தீர்ந்து செல்வம் வந்து சேர மறக்கலாம் இதை மட்டும் செய்யுங்க 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now