Two Plants To Keep With Tulsi In Tamil
பொதுவாகவே சில செடிகளுக்கு தெய்வீக சக்தி உண்டு. நமக்கு என்ன தான் மனம் குழப்பம் மற்றும் தடுமாற்றத்தில் இருந்தாலும் சில செடிகளின் அருகில் செல்லும் போது மனம் லேசாவதை பல தடவை நாம் உணர்ந்திருப்போம். அதற்கு காரணம் அந்த செடிக்கு உண்டான தெய்வீக சக்தி தான். எல்லோருக்கும் தெரியும் துளசி ஒரு தூய்மையான செடி. கோயில்களில் அதிகம் பயன்படுத்த கூடிய இந்த துளசி செடியோடு இரண்டு செடிகளை நீங்கள் உங்கள் வீட்டில் நட்டால் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். அதிர்ஷ்டம் தரும் இரண்டு செடிகளை கீழே பார்ப்போம்.
துளசி
வாஸ்து சாஸ்திரப்படி துளசி செடியை வீட்டில் நடுவர்கள். அப்படி வைக்கும்போது சந்தோஷம், வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி கிடைக்கும். துளசி ஒரு பரிசுத்தமான செடியாகும். அதனால் இன்றும் நகரத்தில் கூட துளசி செடியை வீட்டில் வைத்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த துளசி செடியோடு இந்த செடிகளையும் சேர்த்து நட்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று ஐதீகம் கூறுகிறது.
தாதுரா செடி
சிவபெருமானுக்கு மிகவும் உகந்த இந்த தாதுரா செடியை நீங்கள் துளசியோடு சேர்த்து நடும்போது உங்கள் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும். இந்த செடி அதிகமாக சிவபெருமானை வழிபட பயன்படுத்தப்படுகிறது. இந்த தாதுரா செடியை துளசியோடு சேர்த்து நடும் போது உங்கள் வீட்டில் உள்ள பிரச்சனைகள் சரியாகி விடும். கணவன் மனைவி உறவு பலப்படும்.
எருக்கன் செடி
சிவபெருமானுக்கு இந்த எருக்கன் செடியையும் வழிபடுவதற்கு பயன்படுத்தப்படடுகிறது. மேலும் துளசி செடியை போலவே இந்த எருக்கன் செடியும் ஒரு பரிசுத்தமான செடியாக பார்க்கப்படுகிறது. துளசி செடியோடு இந்த எருக்கன் செடியையும் உங்கள் வீட்டின் முன்னாடி வைக்கலாம். இது அதிர்ஷ்டம் மற்றும் செல்வ வளத்தை வீட்டில் அதிகமாக்குகிறது.
எனவே எளிதாக கிடைக்க கூடிய இந்த இரண்டு செடிகளை துளசி செடியோடு சேர்த்து நட்டு பாருங்கள் நன்மை உண்டாகும்.
குழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |