ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் இருக்கலாமா.?

Advertisement

ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் இருக்கலாமா

கர்ப்பிணி பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கும் வரை போராட்டமாக தான் இருக்கும். சும்மாவா சொன்னர்கள் பெண்ணிற்கு பிரசவம் என்பது மறுபிறவி என்று. நம் வீட்டில் உள்ளவர்களும் சரி, வெளியில் உள்ளவர்களும் சரி பல விஷயங்களை கூறுவார்கள். அதில் நல்லதை மட்டும் எடுத்து கொண்டு கெட்டதை விட்டு விட வேண்டும். எல்லார் கூறுவதையும் எடுத்து கொண்டால் நமக்கு தான் பிரச்சனை.

அந்த வகையில் நிறைய நபர்கள் கூறி கேள்விப்பட்டிருப்பீர்கள், இரண்டு கர்ப்பிணி பெண்கள் ஒரே வீட்டில் இருக்க கூடாது என்று சொல்லியிருப்பார்கள். இதை ஏன் இப்படி கூறுகிறார்கள் என்ற பல கேள்விகள் இருக்கும். அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

Two Pregnant Ladies in Same House in Tamil:

ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் இருக்கலாமா

நம்முடைய முன்னோர்களின் காலத்தில் பாட்டிகள் எல்லாம் பலவற்றை கூறுவார்கள். அதில் ஒன்று தான் ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணிகள் இருக்க கூடாது என்று கூறுவார்கள். அந்த காலத்தில் இந்த வார்த்தையை கேட்டு கொண்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் யாரும் கேட்பதில்லை. ஏன் அப்படி இருந்தால் என்ன ஆகும், நீங்கள் சொல்வதெல்லாம் மூட நம்பிக்கை என்று கூறிவிடுவார்கள்.

கர்ப்பிணி பெண்கள் செய்ய கூடாத வேலைகள்

நம் முன்னோர்கள் கூறும் விஷயத்தை மூட நம்பிக்கை என்று சொல்வதற்கு முன் அவை ஏன் அப்படி கூறினார்கள் என்று அறிந்து கொள்வது அவசியமானது. அதன் பிறகு அவர்கள் சொன்னதை நீங்களே கேட்பீர்கள். அந்த வகையில் இரண்டு கர்ப்பிணிகள் ஒரே வீட்டில் இருந்தால் என்ன ஆகும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணிகள் இருக்க கூடாது. அவர்கள் அன்னி, மற்றும் நாத்தனார் ஆக இருக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் முகத்தை பார்த்து கொள்ளும் போது உங்களுடைய குழந்தைக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். ஒரு குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும், மற்றொரு குழந்தை ஆரோக்கியம் குறைவாக பிறக்கும். அதனால் இரு முறைகளில் உள்ளவர்கள் கர்ப்பமாக இருந்தால் ஒரே வீட்டில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

மற்றபடி அக்கா, தங்கை அல்லது வேறு உறவு முறையில் உள்ளவர்களை சந்தித்து கொள்ளலாம். இவர்கள் சந்திப்பதால் எந்த பிரச்சனையும் இருக்காது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement