வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

திருநள்ளாற்றில் மார்ச் 29 ஆம் தேதி சனி பெயர்ச்சி இல்லையா, இதற்கான காரணம் என்ன?

Updated On: March 27, 2025 12:33 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Two Types Of Panchangam In Tamil

சனி பெயர்ச்சி வருகிற மார்ச் மாதம் 29 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் தற்போது திருநள்ளாறு கோயிலில் சனி பெயர்ச்சி அடுத்த ஆண்டு தான் நடைபெறும் என்று அதிகாரபூர்வ செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால் மக்கள் அனைவரும் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவானை பிரார்த்தனை செய்வதற்கு கோயில்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் திருநள்ளாறு கோயிலில் இந்த செய்தி வெளிவந்த பிறகு மக்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். எனவே இன்றைய பதிவில் திருநள்ளாறு கோயிலில் வெளியிட்ட செய்திக்கான காரணத்தையும், இரண்டு விதமான பஞ்சாங்கத்தை பற்றியும் பார்க்கலாம் வாருங்கள்.

சனி பகவானால் சில ராசிக்காரர்களுக்கு 2025 படாத பாடா இருக்க போகுது

பஞ்சாங்கம் என்றால் என்ன?

பஞ்சாங்கம் என்பது, ஒரு நாளில் உள்ள திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய ஒரு அட்டவணை ஆகும், இது வானியல் கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டது. பஞ்சாங்கம் மூலம், ஒரு நாளில் செய்ய வேண்டிய நல்ல செயல்களின் நேரங்கள் மற்றும் செய்யக்கூடாத செயல்கள் பற்றிய தகவல்களை அறியலாம். விவசாயம், திருமணம், பிறப்பு போன்ற பல நிகழ்வுகளுக்குரிய நல்ல நேரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பஞ்சாங்கத்தின் வகை:

  • வாக்கிய பஞ்சாங்கம்
  • திருக்கணித பஞ்சாங்கம்

வாக்கிய பஞ்சாங்கம் என்றால் என்ன?

வாக்கிய பஞ்சாங்கம் என்பது, ஜோதிடர்கள் கிரக நிலவரங்களை அறியப் பயன்படுத்தும் பழமையான பஞ்சாங்கங்களில் ஒன்று, குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது.

திருக்கணித பஞ்சாங்கம் என்றால் என்ன?

திருக்கணித பஞ்சாங்கம் என்பது, கிரகங்களின் இயக்கம் மற்றும் அவற்றின் துல்லியமான கணக்கீட்டின் அடிப்படையில், சந்திரனின் அயனாம்சத்தை வைத்து கணக்கிடப்படும் ஒரு பஞ்சாங்கம் ஆகும். இது வாக்கிய பஞ்சாங்கத்தில் காணப்படும் சில தவறுகளை திருத்தி, துல்லியமான பஞ்சாங்கமாக பார்க்கப்படுகிறது.

இரண்டு பஞ்சாங்கத்திற்கும் உள்ள வேறுபாடு:

ஆரியபட்டா, பாஸ்கரா உள்ளிட்டோரின் காலத்திலேயே திருக்கணித பஞ்சாங்கம் நடைமுறையில் இருந்தது. ஆனால் அதை கணிக்க சற்று கடினமாக இருந்ததால், அதை எளிமையாக்கும் பொருட்டு வரருச்சி என்ற ஜோதிடர் வாக்கிய பஞ்சாங்கம் என பஞ்சாங்கத்தை எளிமைப்படுத்திக் கொடுத்தார்.

அவர் சூரிய சித்தாந்தம், ஆரிய சித்தாந்தத்தைக் கொடுத்தார். சூரிய சித்தாந்தம் வட இந்தியாவிலும், ஆரிய சித்தாந்தம் தென் பகுதியிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு சித்தாந்தங்களும் சில கால இடைவெளிக்கு இடையே கிரக நிலையை சரியாக மீண்டும் கணித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அயன அம்சத்தால் தான் இந்த வேறுபாடு ஏற்படுகிறது. பஞ்சாங்கத்தில் இருக்கக் கூடிய நேர மாறுபாடு, கிரகங்களின் இயக்கம் உள்ளிட்டவற்றை சரிசெய்யும் பொருட்டு காஞ்சி மகா பெரியவரின் உத்தரவின் பெயரில் ஜோதிடர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு ஜோதிடர்களை அழைக்கப்பட்டிருந்தனர்.

அந்த கூட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள திருக்கணித பஞ்சாங்கம் தான் சரி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநள்ளாறு கோயில்:

 சனி பகவானுக்கு உகந்த கோயிலான திருநள்ளாறு கோயிலில் சனி பெயர்ச்சி அடுத்த ஆண்டு தான் என்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்கள். இதற்கான காரணம் திருநள்ளாறு கோயிலில் வாக்கிய பஞ்சாங்கம் பின்பற்றப்படுகிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனி பெயர்ச்சி அடுத்த ஆண்டு தான் நடைபெறுகிறது.  

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனி பகவான் மூன்று ஆண்டிற்கு ஒரு முறை பெயர்ச்சி அடைகிறார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனி பகவான் இரண்டரை ஆண்டிற்கு ஒரு முறை பெயர்ச்சி அடைகிறார்.

பொதுவாக ஜோதிடர்கள் திருக்கணித பஞ்சாங்கத்தை தான் பின்பற்றுகிறார்கள் என்பதால் இந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி சனி பெயர்ச்சி நடக்கிறது. ஆனால் திருநள்ளாறு கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தை பின்பற்றுவதால் அந்த கோயிலில் அடுத்த ஆண்டு தான் சனி பெயர்ச்சி நடைபெறுகிறது.

Saturn Transit To Shukra Foot Good Luck To These Zodiac Signs In Tamil

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now