Udaikkum Sitharu Thengai Eduthu Sapidalama In Tamil
பொதுவாக கோவில்களில் அல்லது ஒரு நல்ல காரியம் தொடங்கும் முன் தெய்வத்தை நினைத்து சிதறு தேங்காய் உடைப்பார்கள். அப்படி இன்னொருவர் வேண்டுதல் வைத்து உடைக்கும் சிதறு தேங்காயை நாம் எடுத்து சாப்பிடுவதால் தோஷம் ஏதும் உண்டாகுமா என்ற பயம் நம்மில் பலருக்கும் உண்டு. இந்த பதிவில் அடுத்தவர் உடைத்த சிதறு தேங்காயை எடுத்து நாம் சாப்பிடலாமா..? சாப்பிடக் கூடாதா..? என தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
மற்றவர் உடைக்கும் சிதறு தேங்காயை எடுத்து சாப்பிடலாமா..?
பொதுவாக கோவில்கள் அல்லது வீடுகளில் தேங்காய் உடைப்பது, தாங்கள் நினைத்த காரியத்தில் எந்த தடையும் இருக்க கூடாது என்பதற்காகவும், அப்படி தடைகள் ஏதும் இருந்தால் உடைக்கும் சிதறு தேங்காய் போல் தடைகள் அனைத்தும் சிதறி போய்விடும் என்று நம்புகிறார்கள்.
சிலர் தான் நினைத்த காரியம் நிறைவேறி விட்டாலும் இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக தேங்காயை உடைப்பார்கள். அப்படி உடைக்கப்படும் சிதறு தேங்காயை நாம் எடுத்து சாப்பிடலாம். அதில் நமக்கு எந்த பாவமும் தோஷமும் சேர்வதில்லை.
பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக தான் தேங்காயை உடைக்கிறார்கள். அது கடவுளுக்கு சமர்ப்பணம் ஆன ஒன்று. அதனை மற்றவர்கள் எடுத்து சாப்பிடுவதால் எந்த பாவமும் சேர்வதில்லை.
ஆனால் உடைத்தவரே எடுத்து சாப்பிடக்கூடாது. ஒருவர் தன் பிரச்சனையை மனதில் நினைத்து அந்த பிரச்சனை விலக வேண்டும் என உடைக்கும் தேங்காயை உடைத்தவரே எடுத்து சாப்பிட்டால் வேண்டிய காரியம் நிறைவேறாது.
அதிலும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சிதறு தேங்காயை எடுத்து சாப்பிடலாம். ஆனால் மற்றவர்கள் சிதறு தேங்காயை எடுத்து சமைப்பது மற்றும் உடைத்தவரே எடுத்து சாப்பிடுவது போன்ற செயல்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.
விநாயகருக்கு என்ன வேண்டுதலுக்கு எத்தனை தேங்காய் உடைக்க வேண்டும்..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |