உள்ளங்கையில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணம்
இன்றைய பதிவில் உள்ளங்கையில் அரிப்பு வருவதற்கான காரணம் என்ன என்பதை பற்றி பார்க்க போகிறோம். நம்முடைய உள்ளங்கையில் ஏற்படக்கூடிய அரிப்பானது சில நேரங்களில் அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் தீமைக்கு அறிகுறியாகவும் கருதப்படுகிறது. உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் திடீரென அரிப்பு ஏற்பட்டால் அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது.
மேலும் , நம் கை, உள்ளங்கை மற்றும் கால் , பாதங்களில் ஏற்படக் கூடிய அரிப்பு சில நேரங்களில் அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டத்தையும் தர கூடியதாக இருக்கும். சில சமையம் உடலில் அரிப்பு ஏற்படுவது ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படக் கூடும் என்பதை குறிக்கிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் உள்ளங்கையில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணம் என்பதை பற்றி பார்க்க போகிறோம்.
வலது காலில் அரிப்பு ஏற்படுவதற்கான பலன்:
உங்களின் வலது பாதம் மற்றும் வலது உள்ளங்கையில் அரிப்பு ஏற்பட்டால் அது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. மேலும், பாதத்தில் ஏற்படக் கூடிய அரிப்பு நல்ல விஷயங்களை உணர்த்துகிறது.
இதன் மூலம் நீங்கள் விரைவில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான அறிகுறியாகவும். இந்த பயணத்தின் மூலம் உங்களுக்கு சாதகமான பலன் கிடைப்பதையும், உங்களில் தொழிலில் வெற்றியை அடைவதையும் இதன் மூலம் பணவரவு அதிகரிக்கும் என்பதையும் குறிக்கிறது.
இடது காலில் அரிப்பு ஏற்பட்டால் என்ன பலன்:
உங்களுக்கிடையே இடது கால் மற்றும் கைகள், பாதத்தில் அரிப்பு ஏற்படுவது.உங்கள் வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருப்பதை உணர்த்துகிறது. இதனால் நீங்கள் ஏதேனும் ஒன்றை இழப்பதற்கு நேரிடும் என்பதையும் குறிக்கிறது. மேலும், இடது கால் பாதத்தில் அரிப்பு ஏற்படுவது ஆரோக்கியத்தில் பிரச்சனை வரக் கூடும் என்பதை உணர்த்துகிறது.
வலது உள்ளங்கையில் அரிப்பு ஏற்படுவதற்கான பலன்:
உங்கள் உள்ளங்கைகளில் அரிப்பு ஏற்படுவதால் அது நல்ல லாபம் வருவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது . ஒரு கையில் அரிப்பு ஏற்பட்டால் அவருக்கு எதிர்பாராத விதமாக பணவரவு ஏற்படக் கூடும்.
இடது உள்ளங்கையில் அரிப்பு ஏற்படுவதற்கான பலன்:
இடது கையில் அரிப்பு ஏற்பட்டால் பணச்செலவு அதிகரிக்க கூடும் என்பதற்கான அறிகுறியாகும். அதுமட்டுமல்லாம் இடது கையில் அரிப்பு ஏற்படுவது நோயின் அறிகுறியாக கருதப்படுகிறது.
உள்ளங்கையில் M வடிவ ரேகை இப்படி இருக்கா அப்போ உங்களுக்கு உள்ள சூப்பர் பவர்ஸ் பத்தி தெரியுமா…
வலது கை விரலில் அரிப்பு :
- ஆள் காட்டி விரல் -கல்வி திருமணம் போன்ற விஷயங்களில் நல்ல பலன் கிடைக்கும்.
- நடுவிரல் -வீடு, மனை வாங்குவது போன்ற பூமி ஆதாயம் கிடைக்கும்.
- மோதிர விரல் -பதவி மற்றும் புகழ் உயர்வு கிடைக்கும்.
- சிறிய விரல் -நல்ல செய்திகள் உங்களை தேடி வரும்.
இடது கை விரலில் அரிப்பு :
- ஆள் காட்டி விரல் -உறவுகளில் கெட்ட செய்தி வரும்
- நடுவிரல் -பண இழப்பு
- மோதிர விரல் – வாழ்க்கையில் வீழ்ச்சி,தாழ்வு
- சிறிய விரல்- கெட்ட விஷயங்கள் வரக் கூடும்.
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |











