உள்ளங்கையில் M வடிவ ரேகை இப்படி இருக்கா அப்போ உங்களுக்கு உள்ள சூப்பர் பவர்ஸ் பத்தி தெரியுமா…

Advertisement

M வடிவ கைரேகை 

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முக அமைப்பையும், உடல் அமைப்பையும் கொண்டிருப்பார்கள். ஒரே மாதிரியான முக அமைப்பு கொண்டவர்கள் உலகில் ஏழு பேர் இருப்பார்கள். ஆனால் ஒரே மாதிரியான கைரேகை கொண்டவர்கள் யாரும் இந்த உலகத்திலும் இருப்பது இல்லை. அத்தகைய சிறப்புவாய்ந்த கைரேகையை கொண்டு உங்களின் தனித்திறமையும் உங்கள் வாழ்கை பலனையும் அறிந்துகொள்ளலாம். வாருங்கள் அந்த வகையில் இன்று உங்கள் கையில் M வடிய குறி இருந்தால் என்ன பலன்கள் என்று பார்க்கலாம்..

உள்ளங்கையில் M குறியீடு இருந்தால் என்ன பலன் :

ullankaiyil m regai palangal in tamil

பொதுவாக உள்ளங்கையில் கன்னாபின்னாவென்று எக்கச்சக்கமான கோடுகள் அடர்த்தியாகவும், அடர்த்தி குறைவாகவும் தெரியும். அதில் X வடிவ குறியீடுகள் அதிகம் தென்படும். குறிப்பிட்டு மூன்று அல்லது நான்கு கோடுகள் மட்டும் ரொம்பவே அடர்த்தியாக பளிச்சென தெரியும். இப்படி அடர்த்தியாக தெரியும் கோடுகளில் நான்கு கோடுகள் ஒன்று இணைந்து M போன்ற வடிவத்தை கொண்டு இருந்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்ட சாலியாக இருப்பார்கள்.

M குறியீடு கொண்டவர் அதிக புத்திசாலித்தனத்துடன் காணப்படுவர். செல்வசெழிப்போடு வாழ்வார். எதையும் ஆராய்ந்து செயற்புரியும் பக்குவம் கொண்டவர்.

சாதாரணமாக ஒருவரிடம் இருக்கும் உள்ளுணர்வு அதாவது இன்டியூஷன் M வடிவக் குறியீடு உள்ளவர்களுக்கு அதிகம் இருக்கும். உள்ளுணர்வு அதிக அளவில் இவர்களிடம் இருக்கும். ஒரு கையில் மட்டும் M வடிவாய் குறியீடு உள்ளவர்களுக்கு மூளையில் இருக்கும் இந்த இன்டியூஷன் எதையும் மறந்து போகாமல் நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். நீங்கள் மறந்து விட்டு சென்றாலும் உடனே உங்களுக்கு நினைவூட்டி எச்சரிக்கையை எழுப்பும்.

உங்கள் அஞ்சறை பெட்டியில் உள்ள ஒரு பொருள் போதும் … வீட்டில் வைக்க இடமில்லாத அளவிற்கு பணம் சேருவதற்கு….

இந்த வகையில் இரண்டு கைகளிலும் M போன்ற அமைப்பு கொண்டவர்களுக்கு அதிக உள்ளுணர்வு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நினைத்தாலும் இவர்களால் எதையும் மறக்க முடியாது, சரியாக இவர்களுடைய மூளை உள்ளுணர்வைத் தூண்டி அறிவுறுத்தி விடும். இத்தகைய சூப்பர் பவர் கொண்ட M வடிவ குறியீடு உள்ளவர்கள் உலகில் அபூர்வமாக தென்படுகின்றனர்.

சாதாரணமாக ஒருவரை இன்னொருவர் புரிந்து கொள்வதற்கு கொஞ்ச காலம் எடுக்கும். ஆனால் இந்த M வடிவ குறியீடு உள்ளவர்கள் ஒருவரை எடை போடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். லட்சம் பேரை வேலை வாங்கும் திறமை இவர்களிடம் இருக்கும். தனக்குக் கீழ் எவ்வளவு பெயர் பணி புரிந்தாலும் அவர்களை தலைமை ஏற்று வழி நடத்திச் செல்லும் திறமை இவர்களிடம் இருக்கும்.

வீட்டில் இதை எல்லாம் செய்யாமல் இருந்தாலே போதும் உங்கள் கடன் பிரச்சனை தீர்ந்து செல்வம் பெருகும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

 

Advertisement