Unlucky Number for 12 Zodiac Sign in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்கும் எது துரதிர்ஷ்டமான நம்பர் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். அதிர்ஷ்டம் என்பது நம் வாழ்வில் இருந்தால் மட்டுமே வாழ்க்கை சுமூகமாக இருக்கும். என்னதான் நாம் வாழ்க்கையில் முயற்சி கஷ்டப்பட்டாலும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஒரு சிலருக்கு இந்த அதிர்ஷ்டம் என்பது இருந்துகொண்டே இருக்கும், ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் எட்டிக்கூட பார்க்காது. ஒவ்வொருவருக்கும் ஒரு பொருள், ஒரு நிறம், ஒரு எண் இதுபோன்ற பல அதிர்ஷ்டம் உடையதாக இருக்கும்.
நமக்கு அதிர்ஷ்டமானவை பற்றி நாம் எப்படி தெரிந்துகொள்கிறமோ அதேபோல், நமக்கு துரதிர்ஷ்டமானவை பற்றியும் தெரிந்துகொள்வது மிகவும். அந்த வகையில், 12 ரசிக்கும் துரதிர்ஷ்டமான எண் எது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். எண்கணித ஜோதிடத்தின்படி, 12 ராசிகளுக்கும் ஒரு சில எண்கள் அதிர்ஷ்டம் உடையதாக இருக்கும், ஒரு சில எண்கள் துரதிர்ஷ்டமான எண்ணாக இருக்கும்.
12 ராசிகளுக்கான துரதிர்ஷ்டமான எண்கள் | Unlucky Number for All Zodiac Sign in Tamil:
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் 6 என்ற எண்ணில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது பதட்டத்தையும் ஒழுங்கற்ற முடிவுக்கும் வழிவகுக்கும். உங்களின் முடிவெடுக்கும் திறன்களை பாதிக்கும். ஆகையால், மேஷ ராசிக்காரர்கள் 6 என்ற எண்ணை தவிர்த்துக்கொள்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு 7 என்ற எண்ணில் எச்சரிக்கை வேண்டும். இந்த எண் உங்களின் பொருளாதாரத்தையும் மன அமைதியையும் பாதிக்கும். மேலும், எதிர்பாராத செலவுகளும் உண்டாகும். ஆகையால், ரிஷப ராசிக்காரர்கள் 7 என்ற எண்ணை தவிர்க்க வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு 3 என்ற எண்ணில் எச்சரிக்கை வேண்டும். இந்த எண் உங்கள் கவனத்தை எளிதாக சிதறடிக்க செய்யும். மேலும், உறவுகளில் பாதிப்பையும் எற்படுத்தும். எனவே, மிதுன ராசிக்காரர்கள் 3 என்ற எண்ணை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
உங்கள் ராசிப்படி நீங்கள் செய்ய வேண்டிய தானங்கள்..!
கடகம்:
கடக ராசிக்காரர்கள் 4 என்ற எண்ணை தவிர்க்க வேண்டும். இந்த எண்ணில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இது உங்கள் குடும்ப வாழ்க்கையை பாதிக்கலாம். ஆகையால் 4 என்ற எண்ணில் வரக்கூடிய தேதிகளில் எந்த ஒரு முக்கிய செயல்களையும் செய்யாதீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிகர்கர்கள் 9 என்ற எண்ணை தவிர்க்க வேண்டும். 9 என்ற எண்ணில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த எண் உங்களின் படைப்பாற்றல் மற்றும் சுய வெளிப்பாட்டைப் பாதிக்கலாம்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் 8 என்ற எண்ணை தவிர்த்துக்கொள்வது நல்லது. இந்த எண் உங்கள் உடல்நலத்தையும் நல்வாழ்வையும் பாதிக்கும். ஆகையால், கன்னி ராசிக்காரர்கள் 8 என்ற எண்ணை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் 5 என்ற எண்ணில் கவனமாக இருக்க வேண்டும். இந்த எண் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களையும் மோதல்களையும் கொண்டுவர வாய்ப்புள்ளது. ஆகையால், துலாம் ராசிக்காரர்கள் 5 என்ற எண்ணை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் 2 என்ற எண்ணில் கவனமாக இருப்பது நல்லது. இது உங்களின் உணர்ச்சிவசப்பட்ட நிலையை வெளிப்படுத்துகிறது. மேலும், பாதுகாப்பின்மை மற்றும் பொறாமை உணர்வுகளுக்கு வழிவகுக்கும். ஆகையால், 2 என்ற எண்ணை விருச்சிக ராசிக்காரர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் 6 என்ற எண்ணில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த எண்ணை தவிர்ப்பது நல்லது. இது உங்களின் சுதந்திரம் மற்றும் அன்பைப் பாதிக்கலாம். ஆகையால், 6 என்ற எண்ணை தவிர்த்து கொள்வது நல்லது.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் 3 என்ற எண்ணில் கவனமாக இருக்க வேண்டும். இந்த எண்ணை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த எண் நடைமுறை மற்றும் ஒழுக்கமான இயல்பைப் பாதிக்கலாம். 3 ஆம் இலக்கத்துடன் வரும் எண்களை தவிர்க்க வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் 4 என்ற எண்ணில் கவனமாக இருக்க வேண்டும். இந்த எண் உங்கள் முன்னேற்றத்தில் சில தடைகளை உண்டுபண்ணும். கும்ப ராசிக்காரர்கள் 4 ஆம் இலக்கத்துடன் தொடர்புடைய தேதிகளில் முக்கியமான செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் 1 என்னை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது உங்களுக்கு ஏற்ற எண் அல்ல. இது பதட்டம் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவழிக்கும் என்று கூறப்படுகிறது. 1 என்ற இலக்கத்தைக் கொண்ட தேதிகள் அல்லது வருடங்களில் முக்கிய வேலைகள் அல்லது வேறு முக்கியமானவற்றை செய்வதை செய்வதை தவிர்க்க வேண்டும்.
உங்கள் ராசிக்கு எது பொருத்தமான அதிர்ஷ்ட கல் தெரியுமா..?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |