Unlucky Tree For Home in Tamil | வீட்டில் வளர்க்க கூடாத மரம்
அனைவருமே நமது வீடுகளில் நிறைய மரம், செடி மற்றும் கொடிகள் போன்றவற்றை வளர்த்து வருவோம். ஆனால் ஆன்மீக ரீதியாக வீட்டில் வளர்க்க கூடாத சில மரங்களும் உள்ளது. இதனை வளர்த்தால் வீட்டில் செல்வ வளம் என்பதே இருக்காதாம். பொதுவாக நாம் வீட்டில் செல்வம் நிலைக்க சில விஷங்களை கடைபிடித்து வருவோம். அதாவது, மாலை நேரங்களில் அடுத்தவர்க்கு எந்த பொருளையும் கொடுக்க மாட்டோம், வீட்டில் துவரம்பருப்பு, பால், உப்பு போன்றவற்றை தீராமல் பார்த்து கொள்வோம் இதுபோன்ற பல விஷயங்களை செல்வம் நிலைக்க செய்து வருவோம். அதேபோன்று, வீட்டில் செல்வம் நிலைக்க ஒரு சில மரங்களை வளர கூடாது என்று கூறப்படுகிறது. எனவே அந்த மரங்கள் என்னென்ன என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Which Plants are Unlucky For Home in Tamil:
வளர்க்ககூடாத மரங்கள்:
செல்வ வளம் செழிக்க வேண்டுமென்றால் வீட்டில் அகத்தி மரம், பனைமரம், முருங்கை மரம், புளிய மரம், மகிழ மரம், அரசமரம், ஆலமரம் மற்றும் செண்பக மரம் போன்ற மரங்களை வளர்க்க கூடாது.
அதுமட்டுமில்லாமல் கொடி வகைகளான அவரை செடி மற்றும் பாகற்காய் செடியை வீட்டில் வளர்க்க கூடாது. மேலும், எருக்கம் செடியும் வளர்க்க கூடாது.
எந்த பறவை வீட்டிற்குள் கூடு கட்டினால் மிகவும் அதிர்ஷ்டம் தெரியுமா..?
செல்வ வளம் பெறுக என்ன மரம் வளர்க்க வேண்டும்.?
வீட்டில் செல்வ வளம் பெருக வேப்ப மரம், தென்னை மரம், பலா மரம், பாகு மரம், மாதுளை மரம் மற்றும் நார்த்தை மரம் போன்ற மரங்களை வளர்க்க வேண்டும். மேலும், வெள்ளைவேலான் மரம், எலுமிச்சை மரம் போன்றவற்றையும் வளர்க்கலாம்.
செடி வகைகளில் துளசி செடி வளர்க்க வேண்டும்.
கொடி வகைகளில் மல்லிகை, முல்லை மற்றும் மணிபிளான்ட் போன்றவற்றை வளர்க்கலாம்.
எந்த திசையில் மரங்களை வைக்க வேண்டும்.?
வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மரம் செடிகளை வளர்ப்பதன் மூலம் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்று கூறப்படுகிறது.
வீட்டில் இருக்க கூடாத பொருட்கள் மீறி வைத்திருந்தால் பணம் கஷ்டம் தான்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |