Uppu Deepam in Tamil
இன்றைய ஆன்மிகம் பதிவில் உப்பு தீபம் ஏற்றும் முறை மற்றும் அதை ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய நிலையில் அனைவருக்கும் பணவரவு இல்லை என்பது தான் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பணவரவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பலரும் பல பரிகாரங்களை செய்து வருகிறார்கள். செய்த பரிகாரங்கள் ஏதும் பலனளிக்கவில்லை என்று சொல்பவர்கள் இந்த தீபத்தை ஏற்றி வழிபடுங்கள். பிறகு உங்கள் வீட்டில் பணமழை தான்..!
வீட்டில் பணமழை பொழிய உப்பு ஜாடிக்கு கீழ் இந்த பொருளை மட்டும் வையுங்கள்..! |
உப்பு தீபம் ஏற்றும் முறை:
ஒரு பெரிய அகல் விளக்கு எடுத்து கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்து பின் அகல் விளக்கு உள்ளே மஞ்சள் தடவி மேல்புறம் குங்குமம் வைத்து கொள்ளுங்கள்.
பின் அந்த விளக்கை ஒரு பித்தளை தட்டில் வைக்க வேண்டும். அகல் விளக்கு முழுவதும் கல் உப்பை நிரப்பி வைத்து கொள்ளுங்கள். தட்டை சுற்றி பூக்களால் அலங்கரித்து கொள்ளுங்கள்.
அடுத்து 2 சிறிய அகல் விளக்குகள் எடுத்து கொள்ளுங்கள். ஒரு விளக்கில் மஞ்சள் தடவிய பச்சரிசியை சிறிதளவு எடுத்து கொள்ளுங்கள். மற்றொரு விளக்கில் கல்கண்டு சிறிதளவு எடுத்து கொள்ள வேண்டும்.
பின் அரிசி வைத்த விளக்கின் மேல் இந்த விளக்கை வைத்து கொள்ளுங்கள். அடுத்து உப்பு நிரப்பி வைத்துள்ள விளக்கின் மீது இந்த 2 விளக்குகளையும் ஒன்றன் மேல் ஓன்று இருக்குமாறு வைத்து கொள்ளுங்கள்.
பிறகு கல்கண்டு சேர்த்த விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு கொள்ளுங்கள். பிறகு இதை பூஜை அறையில் வடக்கு திசை பார்த்து இருப்பது போல வைத்து, தீபத்தை ஏற்றுங்கள். அதாவது, தீபம் வடக்கு திசை பார்த்து எரிய வேண்டும்.
செல்வத்தை வாரி வழங்கும் குபேர ஜல தீபம் ஏற்றும் முறை மற்றும் அதன் பலன்கள்..! |
உப்பு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்:
எவ்வளவு சம்பாதித்தாலும் வீட்டில் தங்கவில்லை என்று சொல்பவர்கள் இந்த உப்பு தீபத்தை ஏற்றி வழிபடலாம். இதனால் வீட்டில் பணவரவு அதிகரிக்கும். செல்வவளம் பெருகும். கடன் பிரச்சனை எவ்வளவு இருந்தாலும் அது காணாமல் போய்விடும்.
புதிதாக தொழில் தொடங்குபவர்கள் இந்த உப்பு தீபத்தை தொழில் செய்யும் இடத்தில் ஏற்றி வழிபடலாம்.
இந்த தீபத்தை வெள்ளிக்கிழமையில் ஏற்றி வழிபட வேண்டும். இதுபோல உப்பு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். பணக்கஷ்டம், கடன் பிரச்சனை, சண்டை சச்சரவுகள், சிக்கல்கள் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை வைத்தால் பண வரவு அதிகரிக்கும் கடன்கள் அடையும் வீண் செலவு குறையும்.. |
இந்த இடத்தில் உப்பு வைத்தால் செல்வ வளம் குறையவே குறையாது |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |