உத்திரட்டாதி நட்சத்திரம் குணங்கள் பற்றி தெரியுமா..?

Advertisement

Uthrattathi Nakshatra Rasi

அன்றாடம் நாம் எண்ணற்ற நபர்களை சந்திக்கின்றோம் ஆனால் அவர்களின் குணம் அனைத்தும் ஓரே மாதிரியாக இருக்கும் என்று கூற முடியாது. ஏனென்றால் ஒவ்வொருவரின் குணமும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அப்படி பார்த்தால் ஆன்மீகத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை வைத்து ஒருவரின் குணத்தினை இப்படி தான் இருக்கும் என்று கூறுவார்கள். இவற்றை அடிப்படையாக வைத்து இன்றைய பதிவில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் என்றும், அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் பார்க்கலாம் வாங்க..!

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் உங்களுடைய திருமண வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் 

உத்திரட்டாதி நட்சத்திரம் குணங்கள்:

ராசியில் கடைசி ராசியாக மீனா ராசியில் தான் உத்திரட்டாதி நட்சத்திரம் காணப்படுகிறது. இத்தகைய நட்சத்திரத்தின் அதிபதி சனீஸ்வர பகவான் ஆவர்.

 உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

  • உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் வாழ்க்கையினை மற்றவர்களுக்காக வாழாமல் தனக்காக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்.
  • அதேபோல் நேர்மையான குணத்தினை கொண்டு செயல்படும் ஆற்றல் கொண்டவராக இருப்பார்கள். அதேபோல் பல தோல்விகள் வந்தாலும் அதனை கண்டு அச்சம் கொள்ள மாட்டார்கள்.
  • இத்தகைய நட்சத்திரக்காரர்கள் உள்ளத்திலும், வெளி தோற்றத்திலும் தூய்மை குணம் கொண்டவராகவும், பேச்சு ஆற்றல் உடையவராகவும் இருப்பார்கள்.
  • இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறருக்கு உதவும் குணம் மற்றும் நண்பர்கள் வட்டாரம் என இவை இரண்டும் அதிகமாக இருக்கும்.
  • மேலும் இந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிடிவாத குணம் மற்றும் முன்கோபம் என இவை இரண்டு சிறிது அதிகமாக இருக்கும்.
  • அதேபோல் எதிர்காலத்தை எண்ணி அஞ்சாமல் நிகழ்காலத்தை மட்டும் ஆனந்தமாக நினைத்து வாழும் தன்மை உடையவர்.
  • வாழ்க்கையில் செய்யும் செயல் எதுவாக இருந்தாலும் அதனை தர்மத்தின் வாயிலாக செய்ய வேண்டும் என்று விரும்புவர்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை:

கல்வி:

இந்த நட்சத்திரக்காரர்கள் கல்வியில் அந்த அளவிற்கு விருப்பப்பட்டு படிக்கவில்லை என்றாலும் கூட மற்ற செயல்திறன்கள் அனைத்திலும் வல்லமை கொண்டவராக இருப்பார்கள்.

மேலும் புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் உடையவராக இருப்பார்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரம் திருமண வாழ்க்கை 2023:

திருமணத்திற்கு பிறகு இந்த நட்சத்திரக்காரர்கள் அதிக அன்புமிக்க ஒரு நபராக மாறி அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்து இருப்பார். அதேபோல் குடும்பத்தின் தேவைகளை முன்கூட்டியே அறிந்து அவற்றை பூர்த்தி செய்யும் குணம் உடையவராக இருப்பார்கள்.

தொழில்:

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் இளம் வயதில் இருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகமாக இருப்பதால் பத்திரிக்கை, கதை எழுதுவது என இத்தகைய வரிசை ரீதியாக தொழில் செய்யும் திறமை உண்டு. மேலும் வெளி நாடுகளில் பணிபுரியும் வாய்ப்பும் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு நிறையவே இருக்கிறது.

கும்ப ராசி சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் பற்றி தெரியுமா 

அதிஷ்டமான நிறம் மற்றும் கல் என்ன.?

  • அதிர்ஷ்டமான நிறம்- கருநீலம்
  • ராசியான கல்- நீலக்கல்
  • அதிர்ஷ்டமான எண்- 8,6,5
  • அதிபதி- சனீஸ்வர பகவான் 

மந்திரம்:

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பொருந்தும் நட்சத்திரங்கள்:

பெண் நட்சத்திரம்:

அஸ்தம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2 மற்றும் 3-ஆம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் உத்திரட்டாதி நட்சத்திர பெண்ணிற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரம்.

ஆண் நட்சத்திரம்:

ரேவதி, புனர்பூசம், உத்திராடம், பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரம் 2, 3 மற்றும் 4-ஆம் பாதம் இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் உத்திரட்டாதி நட்சத்திர ஆணிற்கு பொருத்தமான பெண் நட்சத்திரம் ஆகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் இப்படி தான் இருக்குமா 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement