Uvari Temple History Tamil
ஓம் நமசிவாய.. பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள்.. இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது இந்த கோயில் எங்கு அமைந்துள்ளது, என்னென்ன பிரச்சனைகளை நிறைவேறுகிறது, கோயில் தல வரலாறு என்ன, சிறப்புகள் என்ன இது போன்ற முழுமையா தகவல்களை இங்கு நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
இது ஒரு சிவன் கோயில் ஆகும். இத்திருக்கோயில் கடற்கடைக்கு மிகவும் அருகில் அமைத்த திருத்தலம் ஆகும். குறிப்பாக இந்த உவரி சுயம்புலிங்கம் கோயில் 1000 வருடங்களுக்கும் பழைமை வாய்ந்தது. இக்கோயிலின் தலைவிருச்சம் கடம்ப மரம் ஆகும். சரி இந்த உவரி சுயம்புலிங்கம் தல வரலாறை பற்றி இப்பொழுது நாம் அறியலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நவக்கிரகம் இல்லாத சிவன் கோயில் எது தெரியுமா?
உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் வரலாறு..! Uvari Temple History Tamil
1000 வருடங்களுக்கு முன்பு கடம்ப மரம் எனப்படும் மரம் தற்பொழுது சுயம்புலிங்க சுவாமி தற்பொழுது இருக்கும் இடத்தில் இருந்ததாம். அந்த மரம் இருக்கும் வழியாக ஒரு பெண்மணி தினமும் பால் வியாபாரத்திற்காக பால் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அவ்வாறு செல்லும் போது அந்த கடம்ப மரத்தின் வேர் அவர்களுடைய காலினை தட்டிவிட கீழ் விழுந்துவிடுகின்றன இதனால் பாலும் கீழ் கொட்டிவிடுகிறது.
இவ்வாறு ஒருநாள் அல்ல இரண்டு நாள் அல்ல எப்போதேல்லாம் அந்த வழியாக பால் எடுத்துக்கொண்டு செல்கிறார்களோ அப்போதேல்லாம் இதே போன்று தான் நடந்துள்ளது. அவர்கள் எப்போதேல்லாம் பால் எடுத்துக்கொண்டு சென்றார்களோ அப்போதெல்லாம் சுவாமிக்கு பால் அபிஷேகம் நிகழ்ந்துள்ளது. இது அங்குள்ள மக்களுக்கு விளங்கவில்லை.
இதனை கண்டு மக்கள் அதிசயப்படாமல் முதலில் பயந்துள்ளனர், இதற்கு காரணம் அந்த வேர் தான் என நினைத்து அந்த வேறை அகற்ற நினைத்தனர், வேறை வெட்டி எடுத்துவிடலாம் என்று ஒரு வெட்டு வெட்டும்போதே அவற்றில் இருந்து இரத்தமாக கொப்பிளித்து வெளியேற வெட்டியவர் அதனை கண்டு மயங்கி விழுந்தார்.
இதனை ஊர் மக்களிடம் தெரிவிக்க, அந்த கூடத்தில் இருந்த ஒரு நபருக்கு சாமி வந்து அருள் ஆடி இங்கு நான் சுயம்பு லிங்கமாக இந்த பூமியில் இருக்கார் என்றும், சுவாமியை நீங்கள் முறையாக வெளியே எடுத்து கோவில் கட்டி கும்பிட்டு வர உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் சந்ததிகளையும் நன்றாக வைத்துக்கொள்வேன் என்பது சுவாமின் வாக்கு, அதுமட்டும் இல்லாமல் அங்கு கொப்பிளித்து வந்த இரத்தத்தில் சந்தனத்தை எடுத்து வையுங்கள்இரத்தம் கொப்பிளிப்பது நின்று போகும் என்று அதே இடத்தில் கோவில் கட்டுங்கள் என்பது சுவாமியின் அருள்வாக்கு என்று கூறினார்.
அதுபோல் மக்களும் சுவாமியின் அருள் வாக்கை ஏற்றுக்கொண்டு அங்கு ஆரம்பத்தில் சிறிய குடிசையில் கோயில் அமைந்தனர், பிறகு தற்பொழுது பெரிய கோயிலாக அமைந்துள்ளது. இதுவே உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் வரலாறு ஆகும்.
கோயில் அமைப்பு:
இந்த கோயிலை சுற்றில் நமது பெரும்பாலானவர்களின் குலதெய்வங்களாக விளங்க தெய்வங்களும் அமைந்துள்ளதால்.
இக்கோயிலில் முகவரிக்கு வலது புறமாக கன்னி விநாயகர் அமர்ந்திருக்கிறார். கன்னி விநாயகரை தொடர்ந்து இடப்புறமாக பிரம்மசக்தி அம்மன் சிலை அமைந்துள்ளது.
அதன் பிறகு பேச்சியம்மன் கோயில் இருக்கிறது, இந்த பேச்சியம்மன் கோயிலை தள்ளி கொஞ்சம் தூரத்தில் மாடசுவாமி அமைத்திருக்கிறார். அதன் பிறகு இசைக்கி அம்மன் அமர்ந்திருக்கிறார்.
உவரி திருக்கோயிலின் சிறப்பு:
இக்கோயிலை சுற்றி வீடுகள் மாதிரி பல கட்டிவிட்டுருப்பார்கள். அது எதற்கு என்றால் வெளியிடுங்கள், வெளி ஊர்கள், வெளி நாடுகளில் இருந்து வரும் மக்கள் அங்கு ஒரு நாள் தங்கிவிட்டு செல்வார்களாம் இது அங்குள்ளவர்கள் நமிபிக்கை, அதற்காக வீடுகள் கட்டப்பட்டிருக்கிறது.
இக்கோயிலில் வைகாசி விசாகம் மிக சிறப்பாக நடைபெறுமாம். மகர மீனுக்கு சுவாமி காட்சி தருதல் என்ற நிகழ்வு இங்கு மிக விமர்ச்சியாக நடைபெறுமாம்.
இது போக இவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று இங்கு மிக சிறப்பாக சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெறுமாம்.
மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை, ஆடி பௌர்ணமி, திருவாதிரை திருநாள், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களும் மிக சிறப்பிக்கமாக கொண்டாடப்படுகிறது.
மேலும் இங்கு தேரோட்டம் மிக விமர்ச்சியாக நடைபெறுகிறது. இதுபோக ஒவ்வொரு பிரதோஷம் நாளன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெரும்.
நேர்த்திக்கடன்:
இக்கோவிலில் உள்ள பேச்சியம்மனுக்கு வத்தல் மற்றும் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செய்வார்களாம். இது எதற்காக நேர்த்தி கடன் என்றால் பேச்சு தடுமாற்றம் உள்ளவர்கள், பேச்சு குறைபாடு உள்ளவர்கள் இது போன்று நேர்த்திக்கடன் செய்வதன் மூலம். அவர்கள் சரளமான எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் பேசுவார்கள் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அதேபோல் அங்கு உள்ள இசைக்கி அம்மனுக்கு குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் கட்டி குழந்தை பேர் கிடைக்க வேண்டும் என்று வேண்டி வந்தால் அடுத்த ஆண்டிற்குள் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் நம்பப்படுகிறது.
வேண்டுதல்:
கடற்கரை மணலெடுத்து வந்து வேண்டிக்கொண்டால், நினைத்ததையெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் உவரி சுயம்புலிங்கம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டில் உள்ள சக்தி வாய்ந்த 28 சிவன் கோவில் விவரங்கள்..!
கோயில் எங்கு அமைத்துள்ளது?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது உவரி கிராமம்.
தூத்துக்குடி- & கன்யாகுமரி சாலையில் (இ.சி.ஆர்), தூத்துக்குடியில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூரில் இருந்து 38 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் உள்ளது உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி கோயில்.
இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |