வடகிழக்கு பல்லி சொல்லும் பலன்
அனைவரின் வீட்டிலும் பல்லி இருக்கும். இந்த பல்லி ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு திசையில் இருக்கும். இது எங்கிருந்து சத்தம் போட்டாலும் அதற்கு ஒரு காரணம் உண்டு. அதே போல் முக்கியமாக நாம் நல்ல விஷயம் பேசும் போது சத்தம் போட்டால் உடனே அதற்கு சம்மதம் என்றும் நல்ல சகுனம் என்றும் சொல்கிறார்கள். அதேபோல் ஏதாவது யோசனையாக ஒரு விஷயம் பேசும்போது அதற்கும் பல்லி சத்தம் மிட்டால் உடனே கெட்ட சகுனம் என்று சொல்வார்கள். அதுவே நம் வீட்டில் இறந்த முன்னோர்களை பற்றி பேசும் போது பல்லி சத்தமிட்டால் உடனே அவர் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறார் என்று கூறுவார்கள். அது போல ஒவ்வொரு திசையில் கத்தினால் ஒவ்வொரு பலன் இருக்கிறது. அதனால் இன்றைய பதிவில் வடகிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
வடகிழக்கு திசை:
ஒவ்வொரு கிழமை வாரியாக பல்லி சத்தம் போட்டால் என்ன பலன் என்று அறிந்து கொள்வோம். ஞாயிற்றுக்கிழமை லாபம், திங்கட்கிழமை கல்யாணம், செவ்வாய்க்கிழமை வாகனம், புதன் கிழமை தோல்வி, வியாழக்கிழமை யோஜனம், வெள்ளிக்கிழமை சத்ரு பயம், சனிக்கிழமை திருடர் பயம் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.
தலைக்கு மேல் பல்லி சொல்லும் பலன் என்ன தெரியுமா
வடகிழக்கு திசையில் பூமியை நோக்கி சத்தமிட்டால் என்ன பலன் என்று அறிந்து கொள்வோம். ஞாயிற்றுக்கிழமை காரிய நாசம், திங்கட்கிழமை காரிய நாசம், செவ்வாய்க்கிழமை லாபம். புதன் கிழமை ஐஸ்வர்யம், வியாழக்கிழமை நஷ்டம், வெள்ளிக்கிழமை கவனமாக இருக்க வேண்டும், சனிக்கிழமை நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றியில் வந்து முடியும்.
அதுவே வீட்டின் மேல்பகுதியில் பல்லி சத்தமிட்டால் ஞாயிற்றுக்கிழமை ஜெயம், திங்கட்கிழமை கேடு, செவ்வாய்க்கிழமை வெளியூர் செல்வது, புதன்கிழமை நல்ல செய்தி ,வியாழக்கிழமை பிரச்சனை, வெள்ளிக்கிழமை லாபம் , சனிக்கிழமை நீங்கள் நினைத்த காரியம் நடக்காது என்பது அர்த்தமாக இருக்கிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |