வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வைகாசி விசாகம் அன்று இந்த பொருட்களை தானம் கொடுக்க மறந்துராதீங்க..

Updated On: May 13, 2026 4:48 PM
Follow Us:
vaikasi visakam dhanam seiya vendiya porutkal
---Advertisement---
Advertisement

வைகாசி விசாகம் அன்று தானம் செய்ய வேண்டிய பொருட்கள்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை நினைத்து விரதமிருந்து வழிபடுவார்கள். அப்படி விரதமிருக்கும் கடவுள்களில் முருகனும் ஒருவர். முருகனுக்கு விரமிருக்க நாட்களான சஷ்டி, கார்த்திகை, தைப்பூசம், செவ்வாய் கிழமை போன்ற நாட்களில் வைகாசி விசாகமும் ஒன்று. இந்த நாட்களில் முருகனுக்கு 48 நாட்கள் மாலையிட்டு விரதமிருப்பார்கள். மாலை அணியாமலும் விரதமிருப்பார்கள். இப்படி விரதமிருப்பதால் முருகன் கேட்ட வரத்தை கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. பொதுவாகவே தானம் கொடுப்பது சிறந்த ஒன்றாக இருக்கிறது. தானம் கொடுப்பதால் நம்முடைய பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. ஒவ்வோர் தானத்திற்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது. அந்த வகையில் வைகாசி விசாகம் அன்று தானம் கொடுக்க வேண்டிய பொருட்கள் என்னவென்று அறிந்து கொள்வோம் வாங்க.

வைகாசி விசாகம் அன்று தானம் செய்ய வேண்டிய பொருட்கள்:

வைகாசி விசாகம் அன்று தானம் செய்ய வேண்டிய பொருட்கள்

வைகாசி விசாகம் அன்று முருகனை நினைத்து விரதமிருந்து வழிபடுவார்கள். ஆனால் அன்றைய தினம் விரதத்தை கடைபிடிப்பதோடு மட்டுமில்லாமல் சில வகையான தனங்களையும் வழங்க வேண்டும். அப்படி என்னென்ன பொருட்கள் தானமாக வழங்க வேண்டும் என்பதனை அறிந்து கொள்வோம் வாங்க.

வைகாசி விசாகம் மாலை போட்டு விரமிருக்கும் முறை, செய்யக்கூடாதவை

உங்களால் என்னென்ன பொருட்களை தானமாக வழங்க முடிகிறதோ அதையெல்லாம் தானமாக வழங்கலாம். இந்த நாளில் தானமாக வழங்குவதன் மூலம் உங்களுடைய பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும். வீட்டில் நீங்கள் இதுவரை கஷ்டப்பட்டு கொண்டிருந்தால் அவை நீங்கும். உங்களுடைய துன்ப காலங்கள் நீங்கும். அதனால தான் வைகாசி விசாகம் அன்று முருக பெருமானை மனதார நினைத்து விரதமிருந்து தானம் வழங்க வேண்டும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.

முதலில் வைகாசி விசாக நாளன்று முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று ஒரு லிட்டர் பால் வாங்கி அபிஷேகத்திற்க்கு வாங்கி தர வேண்டும். அதன் பிறகு தானமாக வாங்கி தர வேண்டிய பொருட்கள் பால், தயிர், சர்க்கரை,வஸ்திர தானம் வழங்கலாம். அதுமட்டுமில்லாமல் அன்றைய தானம் அன்னதானம் வழங்குவது அவ்ளோ சிறப்பு. இந்த நாளன்று அன்னதானம் வழங்குவதால் நீங்கள் மட்டுமில்லை உங்கள் வம்சத்தில் வரக்கூடிய சந்ததிகள் அனைவரும் நல்ல நிலைமையில் இருப்பார்கள். அதனால் முடிந்தவரை அன்னதானம் செய்தி விடுங்கள். இதில் கூறியுள்ள எல்லாவற்றையும் என்னால் தானமாக வழங்க முடியாது என்றால் உங்களால் முடிந்த பொருட்களை தானமாக வழங்குங்கள். உங்களால் முடிந்தால் ஒருவருக்காவது அன்னதானத்தை வழங்குங்கள்.

முருகனின் அருள் உங்களுக்கு மட்டுமில்லை உங்கள் வம்சத்தில் வருகின்ற எல்லாருக்கும் முருகன் அருள் கிடைக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now