வைகாசி விசாகம் மாலை போட்டு விரமிருக்கும் முறை, செய்யக்கூடாதவை

Advertisement

வைகாசி விசாகம் மாலை போட்டு விரதமிருக்கும் முறை

முருகனுக்குரிய நாட்கள் நிறைய இருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த வைகாசி விசாகம். இந்த நாளில் பலரும் 48 நாட்கள், 21 நாட்கள், 11 நாட்கள் என்று விரதமிருப்பார்கள். சில நபர்கள் மாலை போட்டும் விரதமிருப்பார்கள். முருகனுக்கு விரதம் இருப்பதால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மாலை போட்டு விரதமிருக்கும் போது பலருக்கும் பல் விதமான சந்தேகங்கள் வருகிறது. உங்களுடைய சந்தேகங்கள் அனைத்தும் தீரும் வகையில் இந்த பதவி இருக்கும். எப்படியேயென்றால் இந்த பதிவில் வைகாசி விசாகம் மாலை போடும் விரதமுறை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம்.

21, 11, 6, 3 நாட்கள் விரத முறை:

வைகாசி விசாகம் 21 நாள் விரதமானது மே மாதம் இருபதாம் தேதி தொடங்குகிறது. 11 நாள் விரதமானது மே 30-ம் தேதி தொடங்குகிறது. 6 நாள் விரதமானது ஜூன் 4-ம் தேதி தொடங்குகிறது. 3 நாட்கள் விரதமுறையானது ஜூன் 7-ம் தேதி தொடங்குகிறது.  அப்போ நீங்கள் எந்த நாள் விரதமிருந்தாலும் முதல் நாளே விரதத்தை ஆரம்பிக்கணும். அதாவது நீங்கள் 11 நாள் விரமிருக்க போகிறீர்கள் என்றால் மே 29-ம் தேதியே விரதத்தை ஆரம்பிக்கணும். மாலை போட்டு கொள்வதற்கு முருகன் கோவிலுக்கு சென்று என்ன வேண்டுதலுக்கு விரதமிருக்க போகிறீர்கள் என்பதை வேண்டி விட்டு மாலை போட வேண்டும். இந்த விரதமிருக்கும் நாட்களும் ஒருவேளை சாப்பிடாமல் விரதமிருக்கலாம். அப்படியெல்லை என்றால் மூன்று வேலையும் சாப்பிட்டு விட்டு விரதமிருக்கலாம். அசைவ உணவுகள் சாப்பிடாமல் சைவ உணவுகளை சாப்பிட வேண்டும்.

வைகாசி விசாகம் தேதி மற்றும் நேரம் 2025

மாலை போட்டு விரதமிருக்கும் போது செய்ய கூடாதவை:

வைகாசி விசாகம் மாலை போட்டு விரதமிருக்கும் முறை 

நீங்கள் மாலையிட்டு விரதமிருக்கும் நாட்களில் சில செயல்கள் செய்ய கூடாது என்று இருக்கிறது. அவை என்னென்ன அப்படின்னா பாய் போட்டு தூங்க கூடாது, வெறும் தரையில் தான் தூங்க வேண்டும். காலணிகள் அணிய கூடாது. தீட்டு வீட்டுக்கு செல்ல கூடாது, முடித் திருத்தம், முகச் சவரம் செய்ய கூடாது, மது, புகை போன்றவை அருந்த கூடாது. தாம்பத்ய சிந்தனை இருக்க கூடாது. யாரிடமும் கோபமாகவும், கெட்ட வார்த்தைகளை பேச கூடாது. இந்த விஷயமெல்லாம் செய்ய கூடாது.

பூஜை முறை:

விரதமிருக்கும் காலத்தில் பச்ச கலர் வேஷ்டி, துண்டு, அணிந்து கொள்ள வேண்டும். முடிந்த வரை காலை ஏழு மணிக்குள் குளித்து விடுங்கள். காலை, மாலை என இரண்டு வேலையும் தலை குளிக்க வேண்டும். தினமும் இரு வேளைகளும் வீட்டில் விளக்கு ஏற்றி, தூபம் இட்டு, முடிந்த அளவிற்க எளிமையாக பால், கற்கண்டு, வாழைப்பழம், முந்திரி, உலர்ந்த திராட்சை, அன்னம் போன்றவற்றில் நமது சக்திக்கு ஏற்ப நெய்வேத்தியம் செய்ய வேண்டும். திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தர் அனுபூதி, திரு வகுப்பு, திரு விருத்தம் ஆகியவற்றை சொல்லலாம். இவை ஏதும் சொல்ல முடியாதவர்கள் “ஓம் முருகா போற்றி” என்று சொன்னாலே போதும். இந்த விரதமுறையினை பின்பற்றி முருகனின் அருளை பெறுங்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement