Vaikasi Visakam Mantra in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முருகனின் அருளை பெற வைகாசி விசாகம் அன்று சொல்ல வேண்டிய மந்திரம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு விசேஷமான நாளாக வைகாசி விசாகம் இருக்கிறது. அன்றைய தினத்தில் முருகப்பெருமானை நினைத்து வழிபடுவதன் மூலம் துன்பங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும்.
இந்த ஆண்டு வைகாசி விசாகம் மே 22 ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. அன்றைய தினத்தில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து எப்படி வழிபட வேண்டும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து வைகாசி விசாகம் அன்று சொல்ல வேண்டிய மந்திரத்தை படித்து முருகப்பெருமானின் அருளை பெறலாம்.
வைகாசி விசாகம் விரதம் இருப்பது எப்படி..? அப்படி விரதம் இருந்தால் என்ன நடக்கும்..?
வைகாசி விசாகம் மந்திரம் | Vaikasi Visakam Mantra in Tamil:
வைகாசி விசாகம் அன்று முருகப்பெருமானின் கந்தசஷ்டி கவசம், ஓம் சரவண பவ மந்திரம் போன்ற மந்திரங்களை சொல்லி வழிபடலாம். அதுமட்டுமின்றி முருகப்பெருமானின் 1008 போற்றி போன்றவற்றை உச்சரிக்க வேண்டும்.
விசாகம் ஸர்வபூதாநாம்
ஸ்வாமிநம் க்ருத்திகா சுதம்
ஸதா பாலம் ஜடாதரம்
ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்
இந்த மந்திரத்தை வைகாசி விசாகம் அன்று முருகப்பெருமானிற்கு நெய்வேத்தியம் படைத்து வழிபடும்போது சொல்ல வேண்டும். மேலும், கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்யும்போது கூற வேண்டும்.
மந்திரம் பொருள்:
விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவரும், சகல உயிர்களுக்கும் தெய்வமாக தலைவராக இருப்பவரும் கார்த்திகை பெண்களின் பாலரும், எப்போதும் குழந்தை வடிவிலேயே காட்சியளிப்பவரும் இளமையானவரும், ஜடாமகுடம் தரித்தவரும், சிவபெருமானின் மைந்தனும் ஆகிய ஸ்கந்தனை வணங்குகின்றேன்.
இந்த மந்திரத்தை கூறி முருகப்பெருமானை தரிசிக்கும்போது நீங்கள் கேட்ட அனைத்தையும் முருகபெருமான் அளிப்பார்.
முக்கியமாக, குழந்தை வரம் இல்லாதவர்களும் திருமணம் பாக்கியம் இல்லாதவர்களும் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் குழந்தை வரம் மற்றும் திருமணம் கைகூடி வரும்.
வைகாசி விசாகம் வழிபாடு செய்யும் முறை மற்றும் சிறப்புகள்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |