வைகாசி விசாகம் விரதம் இருப்பது எப்படி.? |Vaikasi Visakam 2024 Viratham in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வைகாசி விசாகம் விரதம் இருப்பது எப்படி (Vaikasi Visakam 2024 Viratham in Tamil) என்பதை விவரித்துள்ளோம். விசாகம் நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. எனவே, வைகாசி விசாகம் விசாகம் என்பது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாகும். அதாவது, வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திரத்தில் தான் முருகன் அவதரித்ததாக கூறப்படுகிறது.
அப்படி சிறப்பு வாய்ந்த வைகாசி விசாகம் நாளில் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிப்படுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த ஆண்டு வைகாசி விசாகம் மே 22 ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. அன்றைய தினத்தில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து எப்படி வழிபட வேண்டும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து வைகாசி விரதம் இருந்து முருகப்பெருமானின் அருளை பெறுவோம்.
Vaikasi Visakam Viratham:
- வைகாசி விசாகம் மே 22 ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் காலையில் எழுந்து குளித்து விட்டு விரதத்தை துவங்கி விட வேண்டும்.
- அன்றைய தினத்தில் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளவர்கள் (முடிந்தவர்கள்) உபவாசமாகவும், முடியாதவர்கள் ஒரு வேளை உணவு உட்கொண்டோ அல்லது பால் பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மூன்று வேலையும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒரு வேளை மட்டுமாவது விரதம் இருக்க வேண்டும்.
- காலையில் பூஜை அறையில் உள்ள முருகப்பெருமானுக்கு மாலை அணிவித்து விளக்கேற்றி முருகனுக்கு உகந்த மந்திரங்களை கூறி வழிபட வேண்டும்.
- அடுத்து, அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட வேண்டும். முடிந்தவரை காலை மாலை என இரண்டு வேளையிலும் கோவிலுக்கு சென்று முருகனை தரிசிக்க வேண்டும். முக்கியமாக முருகன் கோவிலுக்கு அபிஷேகம் செய்ய பால் வாங்கி கொடுக்க வேண்டும்.
- வீட்டில் முருகன் விக்ரஹம், வேல் வைத்திருப்பவரகள் பால் ஊற்றி அபிஷேகம் செய்து வழிபடலாம். அதுவே வீட்டில் முருகன் படம் மற்றும் வைத்திருப்பவர்கள், படத்திற்கு பூ மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பாலை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும். மேலும், முருகனுக்கு நெய்வேத்தியமாக சரக்கரை பொங்கல், பருப்பு பாயசம் போன்றவற்றை படைக்கலாம்.
- முக்கியமாக, குழந்தை வரம் இல்லாதவர்கள், முருகன் அவதரித்த நாளாக கூறப்படும் இந்நாளில், முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவதன் மூலம், அடுத்த வருட வைகாசி விசாகத்திற்குள் குழந்தை வரம் கிடைக்கும்.
விரதம் இருந்தால் என்ன பலன்.?
- உங்களுக்கு என்ன விதமான கஷ்டங்கள் இருந்தாலும், அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று முருக பெருமானிடம் வேண்டிகொண்டு விரதம் இருந்தோம் என்றால், நீங்கள் வேண்டிய அனைத்தும் நிகழும்.
- முக்கியமாக, குழந்தை வரம் இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபாட்டால் ஓராண்டிற்குள் குழந்தை வரம் கிட்டும்.
- அதேபோல், திருமணம் பாக்கியம் இல்லாதவர்கள் இந்நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிப்படுவதன் மூலம் திருமண வரம் கூடி வரும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |