வைகுண்ட ஏகாதசி வரலாறு | Vaikunda Yegathasi History in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் வைகுண்ட ஏகாதசி கொண்டாடுவதன் காரணம் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். மார்கழி மாதம் சொர்க்கவாசல் ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகின்றன. பெருமாள் பக்தர்கள் அனைவரும் ஏகாதசி அன்று விரதம் இருந்து சொர்க்கவாசல் திறந்த பிறகு பெருமாளை வழிபடுவார்கள். வைகுண்ட ஏகாதசி எதற்காக கொண்டாடுகிறோம் என்று பலருக்கும் தெரிவதில்லை.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி (மார்கழி 26 ஆம் தேதி) வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறோம். இந்நாளன்று மக்கள் அனைவரும் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை வழிபடுவார்கள். வைகுண்ட ஏகாதசி வெகு விமர்சையாக அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடைபெறும். அன்று பெருமாளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவார்கள். வைக்காத ஏகாதசி ஏன் கொண்டாடுகிறோம் என்ற வரலாற்றை பார்க்கலாம் வாருங்கள்.
2025 வைகுண்ட ஏகாதசி, திருப்பதி சொர்க்கவாசல் திறப்பு எப்போது.?
வைகுண்ட ஏகாதசி வரலாறு:
வைகுண்ட ஏகாதசி கொண்டாடுவதற்கு இரண்டு புராண கதைகள் சொல்லப்படுகிறது. அதை ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாருங்கள்.
புராண கதை 1:
கிருதயுகத்தில் முரன் என்கிற ஒரு அசுரன் வாழ்ந்து வந்தான். முரன் என்கிற அசுரன் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய கடவுள்களிடம் நிறைய வரங்களை பெற்று பலசாலியாக இருக்கிறான். பலசாலியாக இருப்பதால் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களும் முனிவர்களும் விஷ்ணு பகவானிடம் முறையிட்டார்கள். உடனே கோபப்பட்ட விஷ்ணு பகவான் போர் புரிந்து முரன் ஓட படைகளை சம்ஹாரம் செய்தார். ஆனால் முரன் உடன் ஆயிரம் வருடங்கள் தொடர்ந்து போர் புரிந்தார்.
முரன் விஷ்ணுவின் பக்தன் என்பதால் அவனை அழிக்க மனமில்லாமல், விஷ்ணு திருந்துவதற்கு ஒரு வாய்ப்பளித்தார். அதன்படி போர்க்களத்திலிருந்து விலகி, பத்ரிகாசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார். பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்துக்கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான்.
அப்போது விஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள். ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள். பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், ‘பெண்ணே! உன்னைக் கொல்ல ஓர் அம்பே போதும்’ என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்தப் பெண், ‘ஹூம்’ என்று ஓர் ஒலி எழுப்பினாள். அவ்வளவில் முரன் பிடி சாம்பலாகிப் போனான்.
அதே நேரத்தில் ஏதுமறியாதவர்போல் கண்விழித்த பகவான், தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டி, ”ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்” என்று அருளினார்.
புராண கதை 2:
முற்காலத்தில் ப்ரஹமா விஷ்ணு பகவானையே பகைத்து போர் புரிந்தார் அப்பொழுது பிரம்மாவுக்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகா விஷ்ணு, தன் காதுகளிலிருந்து மது, கைடபர்கள் என்ற இரண்டு அசுரர்கள் வெளிப்படச் செய்தார். அவர்கள் பிரம்மாவைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த மகா விஷ்ணு, பிரம்மாவை விட்டுவிடும்படியும், அவர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகவும் கூறினார்.அந்த அசுரர்கள் மகா விஷ்ணுவிற்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாகக் கூறினர்.
மகா விஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அசுரர்களாக இருந்தாலும் அவர்கள் கொடுத்த வாக்கு நிறைவேற வேண்டும் என்று எண்ணி “அப்டியே ஆகட்டும் பகவானே, ஒரு விண்ணப்பம். தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் முக்தி அடைய வேண்டும்” என்று கேட்டார்கள்.
பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தினைக் கேட்டனர்.
மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று பரமபதத்தின் வைகுண்ட வாசலை (சொர்க்கவாசல்) திறந்து, அதன் வழியே அசுரர்களை சேர்த்துக்கொண்டார். அசுரர்கள் நமக்கு கிடைத்த இந்த பேரின்பம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி “எங்களுக்கு குடுத்த இந்த பாக்கியத்தை இந்த நாளில் யாரெல்லாம் விரதம் கடைபிடித்து இந்த பரமபத வாசலை கடந்து வாரங்களோ அவங்களுக்கும் இந்த புன்னியத்தை அளிக்க வேண்டும் என்றும் நீங்கள் அருள் புரிய வேண்டும்”. இந்த நாளை அனைவரும் திருவிழாவாக கொண்டாடவேண்டும். என்று வேண்டியிருக்கிறார்கள்.
இதனால் தான் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்க காரணம் என்ன தெரியுமா?
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |












