வக்ர சனியால் இந்த 5 ராசிக்காரர்கள் 2024 ஜூன் வரை கவனமாக இருக்கவும்.

Advertisement

சனி வக்ர பெயர்ச்சி 2024

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே 12 ராசிகளின் பலன்களும் கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியினை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால் 12 ராசிகாரர்களின் வாழக்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். கிரகங்களின் ராசி மாற்றம் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்களை அளிக்கும். எனவே, அந்த வகையில் இன்று வக்ர சனியால் சனி பகவான் கும்ப ராசிகளுக்கு இடம்பெயருகிறார்.

இந்த வக்ரசனி பெயர்ச்சி சில ராசிகாரர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை வழங்கினாலும், 5 ராசிகர்களுக்கு வரும் 2024 ஜூன் வரை சில கஷ்டங்களை வழங்கப்போகிறது. அந்த 5 ராசிக்காரர்கள் யார் யார் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

சனியின் வக்ர பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்:

கடகம்:

சனி வக்ர பெயர்ச்சி 2024

இந்த வக்ர சனி பெயர்ச்சியினால் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையினை புரட்டிபோடப் போகின்றது என்றே கூறலாம். அதாவது கடக ராசிக்காரர்கள் இந்த கால கட்டத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த கால கட்டத்தில் சொத்து விஷயத்தில் ஒரு சில சச்சரவுகள் காணப்படும். அதே போல் நீங்கள் பணத்தை முதலீடு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

விருச்சகம்: 

சனியின் வக்ர பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி கும்பத்திற்கும் இடம் பெயரும் இந்த காலகட்டத்தில் பல வகையான குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகளை உருவாகும். அதாவது இந்த கால கட்டத்தில் பல மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அதே போல் நீங்கள் உங்களின் பணியிடத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். மேலும் உங்களின் வாழ்க்கையில் செலவுகள் அதிகரிக்கும்.

மகரம்:

சனியின் வக்ர பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

சனி கும்பத்திற்கு இடம்பெயர்ந்து அங்கு 2024 ஜூன் வரை நிலைத்திருக்கும். அந்த காலகட்டத்தில் மகர ராசிக்காரர்களுக்கு பல வகையான புது புது பிரச்சனைகளை உண்டாகும். இந்த கால கட்டத்தில் நீங்கள் அநேக மன உளைச்சலை சந்திக்க நேரிடும்.

அதே போல் இந்த கால கட்டத்தில் உங்கள் திருமண வாழ்க்கையில் பல தவறான புரிதலினால் பல வகையான கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாகனத்தில் செல்லும் பொழுது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் வாகனத்தில் செல்லும்பொழுது அதிக கவனம் தேவை.

கும்பம்:

சனியின் வக்ர பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

கும்ப ராசிக்காரர்களுக்கு வரும் 2024-ம் ஜூன் வரை வக்ர சனி பெயர்ச்சி இருப்பதால் இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட்டு கொண்டே இருக்கும். மேலும் நீங்கள் செய்ய கூடிய செயல்கள் அனைத்தும் தோல்வியே சந்திக்க நேரிடும்.

குடும்பத்தில் சண்டைகள் ஏற்படலாம். அதனால் அவ்வப்போது விட்டு கொடுத்து செல்ல வேண்டும். சண்டையினால் மன அழுத்தத்திற்கு ஆளாகுவீர்கள்.

மீனம்:

சனியின் வக்ர பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

இந்த சனி பெயர்ச்சியில் உருவாகும் வக்ர யோகத்தால் மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பாதிப்புகள் அதிக அளவு ஏற்படும். அதாவது உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தம் மற்றும் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

அதே போல் உங்களின் பணியிடத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனென்றால் நீங்கள் செய்யும் ஒரு சிறிய தவறு கூட பெரிய பிரச்சனையில் உங்களை உள்ளாக்கும். இந்த கால கட்டத்தில் உங்களின் பொருளாதார நிலை குறைய வாய்ப்புள்ளது. ஆகையால் பணம் விஷயத்தில் கவனமா தேவை.

சனி பகவானின் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜாக்பாட் அடிக்க போகிறது..

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement