ஆண் வலது கண் துடித்தால் என்ன பலன் | Valathu Kan Thudithal For Male in Tamil

Advertisement

Valathu Kan Thudithal For Male in Tamil

பொதுவாக நம் முன்னோர்கள் நம்முடைய தோற்றத்தை நமக்கு ஜோதிடத்தல்  கூறுவார்கள். உதாரணமாக சிங்கப்பல் இருந்தால் அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள், புகுந்த வீட்டில் நல்லா இருப்பார்கள் என்று கூறுவார்கள்.

அதுமட்டுமில்லமால் நம்முடைய உள்ளங்கைகளில் இரண்டு கைகளை சேர்த்து வைக்கும் போது ஓட்டை இல்லாமல் இருந்தால் நம்மிடம் பணம் இருந்து கொண்டே இருக்கும் என்று கூறுவார்கள். இது போல பல விஷயங்களை கூறுவார்கள். அது போல கண்கள் ஆனது துடிக்கும். சிலருக்கு இடது கண் துடிக்கும், சிலருக்கு வலது கண் துடிக்கும். ஆண்களுக்கு வலது கண் துடித்தால் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.

ஆண்களுக்கு வலது கண் துடித்தால்:

ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நல்ல காலம் என்பதை உணர்த்துவதற்கு துடிக்கிறது. நீங்கள் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். மேலும் பணியிடத்தில் வேலை செய்பவராக இருந்தாலும் பணிகளில் முன்னேற்றம் காணப்படும்.

அதுவே இடது கண் துடித்தால் கெட்ட காலமாக பார்க்கப்படுகிறது. இடது கண் துடித்தால் கஷ்டமான காலமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எந்த செயல் செய்தாலும் கவனமாக செய்ய வேண்டும்.

பெண்களுக்கு கண் துடித்தால்:

பெண்களுக்கு வலது கண் துடித்தால் என்ன

பெண்களுக்கு வலது கண்  துடித்தால் கெட்ட காலமாக பார்க்கப்படுகிறது. நீங்கள் செய்யும் அன்றாட செயல்களை கவனமாக செய்ய வேண்டும். மேலும் உங்களுக்கு கெட்ட செய்திகள் வந்து சேரும்.

அதுவே இடது கண் துடித்தால் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மகிழ்ச்சியாக இருக்கும். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

கண் துடிப்பதன் பொதுவான பலன்:

வலது புருவம் துடித்தால் கையில்பணம் இருந்து கொண்டே இருக்கும்.

இடது புருவம் துடித்தால் குழந்தை வரன் கிடைக்கும், மற்றும் மனதில் கவலை உண்டாகும்.

புருவ மத்தி துடித்தால் உங்களுக்கு பிடித்தவருடன் நேரத்தை கழிப்பீர்கள்.

கண் நடுப்பாகம் துடித்தால் மனைவியை பிரிந்து இருப்பீர்ககள்.

வலது கண் இமை துடித்தால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

இடது கம் இமை துடித்தால் மனதில் கவலை உண்டாகும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement