வன்னி மரம் ஆன்மிக பலன்கள்
பொதுவாக கோவில்களில் உள்ள மரங்களை கடவுளாக பார்ப்பார்கள். அதற்கான சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மரங்களை உகந்ததாக கூறுவார்கள். சாதாரணமாக, கோயில்களில் வேப்ப மரம், வில்லவ மரம், மற்றும் அரச மரங்கள் இருக்கும். மக்கள் அதிகம் அரச மரங்களை வளம் வருவார்கள். அரச மரத்தை விநாயகரின் மறு உருவமாக பார்ப்பார்கள். அதனை வணங்குவது விநாயகரை வணங்குவதற்கு சமமாக பார்க்கப்படுகிறது. அதை போல் விஜயதசமி அன்று வன்னி மரத்தை வணங்குவது சிறப்புமிக்கது. வாருங்கள் இன்றைய பதிவில் வன்னி மரத்தின் சிறப்பையும் விஜய தசமி அன்று வன்னி மரத்தை வணங்குவதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்வோம்.
வன்னி மரமும் வாகை மரமும் துர்க்கை அம்மனுக்கு உகந்தவை. இந்த இரண்டு மரங்களில் வன்னி மரம் மிகவும் சிறந்தது ஆகும். உமா தேவி வன்னி மரத்தடியில் வாசம் செய்ததாகவும் தவம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், விநாயக பெருமானுக்கு பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் மரங்களில் இதுவும் ஒன்று. வன்னி இல்லை விநாயக பெருமானுக்கும், சனி பகவானுக்கும் உகந்தது ஆகும்.
வன்னி மர வழிபாடு:
வன்னிமரமும் துர்கையின் மறு உருவமாக கருதப்படுகிறது. வன்னி மரம் மிகவும் சிறப்பு மிக்க மரமாக கருதப்படுகிறது. வன்னி மரத்தின் அருகே வேற எந்த மரங்களும் வளராது. புதிய வகையான மரங்களை வன்னி மரத்தின் அருகே வளர்ப்பதும் கடினம்.
விஜய தசமியும் வன்னி மரமும்:
- நவராத்திரியின் கடைசிநாளான விஜய தசமி அன்று வன்னி மரத்தை வழிபடுவதால் கோடி நன்மைகள் ஏற்படும்.
- மகிசாசூரன் என்னும் அரக்கனை அளித்த துர்க்கை கோவில் கொண்டிருப்பது வன்னி மரத்தில் தான்.
- துர்காதேவி மகிஷனை அழிக்க விஜயதசமி அன்று தேவர்களிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்வு வன்னிமரத்தடியில் தான் நடந்ததாக நம்பப்படுகிறது.
- வன்னி மரத்தை வணங்கினால் வெற்றிகள் நிச்சயம்.
வன்னி மரமும் விநாயகரும்:
- விநாயகப் பெருமானின் அக்னி சொரூபமாக வன்னிமரம் கருதப்படுகிறது.
- வன்னி இலைகள் விநாயகருக்கு உகந்தது.
- பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது தங்களின் ஆயுதங்களை வெற்றி தரும் வன்னி மர பொந்தில் மறந்து வைத்து பின்னர் போரில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
- அதனால் விஜயதசமி அன்று வன்னிமரத்தை வழிபடுவதால் உங்களின் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது ஐதீகம்.
- வன்னி மர இலை மற்றும் பட்டைகள் ஆரோக்கியத்திற்கு அதிக அளவில் பயன்படுகிறது.
நவராத்திரி பண்டிகை உருவான வரலாறு / புராண கதை
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |