இந்த வாரம் 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம், யாரெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..

Advertisement

வார ராசிபலன்

நம் வாழ்க்கையில் நடக்க கூடிய விஷயங்கள் ஜோதிடத்தை மையப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ராசியும், வாரம் மற்றும் மாதம், ஒவ்வொரு நாளும் எப்படி இருக்க போகிறது என்று ஆன்மிகத்தில் குறிப்பிட்டுள்ளது. இதை நாமும் அறிந்து கொண்டு அதற்கேற்றபடி நடந்து கொள்வோம். அந்தவகையில் இன்றைய பதிவில் 12 ராசியும் எப்படி இருக்க போகிறது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

மேஷம்:

மேஷம்

இந்த வாரம் மேஷ ராசிக்காரர்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் உற்சாகத்துக்கு குறைவிருக்காது. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். பணவரவு சீராக இருக்கும்.

ரிஷபம்:

ரிஷபம்

இந்த வாரம் பொருளாதார வசதிக்கு குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் உடல் அசதி உண்டாகும்.

மிதுனம்:

மிதுனம்

நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் வந்து சேரும். இந்த வாரம் பணவரவு சிறப்பாக இருக்கும். ஆனால் வாரத் தொடக்கத்தில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். அதனால் உங்களுக்கு உயர்ந்த பதவி தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் இந்த வாரம் தொடங்கலாம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும்.

குருவால் உருவாகும் ஹம்ச ராஜயோகம்.. இந்த ராசிக்காரர்களுக்கு அடித்த பம்பர் ஆஃபர்

கடகம்:

கடகம்

இந்த வாரம் ஓரளவு அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். பணவரவைப் பொறுத்தவரை திருப்திகரமான போக்கே காணப்படுகிறது. சிலருக்கு வெளியூர் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்:

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து மறையும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் இதுவ ரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். தந்தை வழி உறவினர்களால் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும்.

கன்னி:

கன்னி

இந்த வாரம் பணவரவில் எந்த வித பிரச்சனையும் ஏற்படாது. வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு மட்டும் எதிர்பாராத பணவரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதரரால் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும் கசப்பு உணர்வுகளும் மாறி, சுமுகமான உறவு ஏற்படும். அலுவலகத்தில் கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை பொறுத்த வரையில் எந்த வித பிரச்சனையும் இருக்காது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு சற்று சிரமமான வாரமாகவே அமையும்.

குருவால் உருவாகும் ஹம்ச ராஜயோகம்.. இந்த ராசிக்காரர்களுக்கு அடித்த பம்பர் ஆஃபர்

துலாம்:

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பண வரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் குறைந்தே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். இந்த வாரம் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு திருப்திகரமான வாரமாக அமையும்.

விருச்சிகம்:

விருச்சிகம்

இந்த வாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணவரவிற்கும் குறைவிருக்காது. கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்கள் இந்த வாரம் குடும்ப நிர்வாகத்தில் பொறுமையை கடைப் பிடிப்பது அவசியம் ஆகும்.

தனுசு:

தனுசு

நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக அமையும். தந்தை வழி உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த வாரம் பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மேலும் வீண் செலவுகளும் ஏற்படாது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போலவே காணப்படும். சக வியாபாரிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும்.

மகரம்:

மகரம்

தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சற்று பொறுமை யுடன் இருப்பது நல்லது. இந்த வாரம் பணவரவுக்குக் குறைவிருக்காது. ஆனாலும், எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளால் கையிருப்பு குறைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இந்த வாரம் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு புகுந்த வீட்டு உறவினர்களிடையே ஏற்பட்டிருந்த அவப்பெயர் நீங்கும்.

கும்பம்:

கும்பம்

இந்த வாரம் உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களுக்கு தேவையான அளவு பணவரவு ஏற்படும். சிலருக்கு தந்தை வழி உறவினர்கள் வருகையால் வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாளாகச் செல்ல நினைத்த புனித தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காக பாடுபடுவீர்கள்.

மீனம்:

மீனம்

மீனா ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணியிடத்தில் எவ்வளவு தான் உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப செலவுகள் அதிகமாக உள்ளதால் கடன் வாங்க நேரிடும்.

செவ்வாய், சுக்கிரன் மிதுனத்தில் இணைவதால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது..! அள்ளிக்கொள்ள தயாராகுங்கள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement