வரலட்சுமி பூஜை நேரம் மற்றும் கடைபிடிக்க வேண்டியவை..

Advertisement

Varalakshmi Pooja in Tamil

திருமணம் ஆன பெண்களும் சரி திருமணமாகாத பெண்களும் சரி வரலட்சுமி விரதம் இருப்பது நல்லது என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. திருமணம் ஆன பெண்கள் விரதம் இருப்பது கணவரின் ஆயுள் நீடிக்கும், திருமணம் ஆகாத பெண்கள் விரதம் இருந்தால் வரன்கள் அமையும். மேலும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் பெளர்ணமி தினத்திற்கு முன் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்க படுகிறது. இந்த வ்ருடத்தில் இன்றைய தினம் வரலட்சுமி விரதம் கடைபிடிப்பார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் வரலட்சுமி விரதத்திற்கான நேரம், பூஜை எப்படி செய்ய வேண்டும் போன்றவை அறிந்து கொள்வோம் வாங்க..

வரலட்சுமி விரத்திற்கான பூஜை நேரம்:

வரலட்சுமி பூஜை செய்யும் முறை

இன்றைய நாள் வெள்ளிக்கிழமையில் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை பூஜை செய்யலாம்.

பூஜையின் போது கடைபிடிக்க வேண்டியவை:

இன்றைய நல்ல வீடுகள் சுத்தப்படுத்தி கழுவி விட்டு மா இலைகள் மற்றும் கோலங்களில் வீட்டை அலங்கரிக்க வேண்டும்.

அஞ்சரை பெட்டியில் இந்த ஒரு பொருளை மட்டும் மறைத்து வையுங்க அள்ள அள்ள குறையாத பணவரவு ஏற்படும்..

மகாலட்சுமியை வரவேற்கும் வகையில் வீட்டில் அம்மனின் பாதசுவடுகளை மா கோலத்தால் அலங்கரிக்க வேண்டும்.

மகாலட்சுமி தேவிக்கு உரிய ஸ்லோகங்களை உச்சரிக்க வேண்டும்.

தேவியின் சிலை அலங்கரிக்க பட வேண்டும்.

அரிசி மற்றும் பானையில் கழுத்தில் பாதி நிரப்பப்பட்ட கலசம் புதிய மாம்பழம் மற்றும் வெற்றிலைகளால் அலங்கரிக்க பட வேண்டும்.

பூஜை முடியும் வரை பெண்கள் விரதம் இருக்க வேண்டும்.

உணவுகளாக வடை, மாங்காய் சாதம், பருப்பு வடை, பாயசம் போன்ற இனிப்பு வகைகளும் கொடுக்கப்படுகின்றன.

வளையல், குங்குமம், வெற்றிலை, பழங்கள், வெற்றிலை போன்றவை பரிசாக கொடுப்பார்கள்.

கடுகு டப்பாவில் இதை மட்டும் மறைத்து வையுங்க.. வீட்டில் வைக்க இடமில்லாத அளவிற்கு பணம் சேரும் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement