வரலக்ஷ்மி விரத சிறப்பு பாடல்கள் | Varalakshmi Poojai Padalkal | Varalakshmi Vratham Songs Tamil Lyrics
வரலட்சுமி விரதம் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் கொண்டாடப்படுகின்றது. சுமங்கலி பெண்கள், மகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமிக்கு செய்யும் சிறப்பான வழிபாட்டு பூஜை இந்த வரலட்சுமி விரதம் ஆகும். விஷ்ணு என்பதற்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்றும், லட்சுமம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு தான் எங்கும் நிறைந்திருப்பதை உணர்த்தும் வகையில் உலகில் உள்ள அனைத்து அழகுகளையும் ஒன்றாக ஒருங்கிணைத்து உருவாக்கிய அடையாளம் தான் மகாலட்சுமி. பொதுவாக ஆடி மாதம் 3 அல்லது 4வது வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது. சுமங்கலிகள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் குடும்பம் தலைத்தோங்கும். கன்னிப்பெண்கள் மேற்கொள்வதால் சிறப்பான குடும்ப வாழ்க்கை அமைய பெறுவர். இத்தகைய சிறப்பு மிக்க வரலக்ஷ்மி விரதத்தை செய்யும் போது லக்ஷ்மியை போற்றி பாடல் பாடப்படும். அந்தவகையில் இன்று வரலக்ஷ்மி பூஜையில் பாடக்கூடிய மஹாலக்ஷ்மி போற்றி பாடலை இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம் வாருங்கள்…
மஹாலக்ஷ்மி போற்றி – வரலக்ஷ்மி விரதம் 2024-ல் கேட்க வேண்டிய பாடல்கள் – வர லட்சுமி 108 போற்றி:
ஆதியாய் வந்த தேவி
ஸ்ரீ ஆதி லக்ஷ்மி தாயே போற்றி
மனபயங்கள் மாய்ப்பவளே
ஸ்ரீ தைரிய லக்ஷ்மி தாயே போற்றி
உயிர்களுக்கே உணவளிப்பாய்
ஸ்ரீ தான்ய லக்ஷ்மி தாயே போற்றி
பத்மராக மலர் அமர்ந்தாய்
ஸ்ரீ கஜலக்ஷ்மி தாயே போற்றி
புத்ர பாக்யம் தருபவளே
ஸ்ரீ சந்தான லக்ஷ்மி தாயே போற்றி
கல்வி செல்வம் தருபவளே
ஸ்ரீ வித்யா லக்ஷ்மி தாயே போற்றி
வெற்றிகள் தரும் மங்களையே
ஸ்ரீ வீரலக்ஷ்மி தாயே போற்றி
செல்வம் அளிக்கும் ஸ்ரீதேவி
ஸ்ரீ தனலக்ஷ்மி தாயே போற்றி
Varalakshmi songs Tamil Lyrics:
பூர்ணகும்பத்தில் அமர்ந்தவளே
ஸ்ரீ வரலக்ஷ்மி தாயே போற்றி
மாங்கல்யத்தை காப்பவளே
ஸ்ரீ சௌபாக்ய லக்ஷ்மி தாயே போற்றி
மனையோகம் தருபவளே
ஸ்ரீ கிரஹலக்ஷ்மி தாயே போற்றி
தேக சுகத்தைத் தரும் தேவி
ஸ்ரீ அன்னலட்சுமி தாயே போற்றி
பதினாறு பேறுதரும் தாயே
ஸ்ரீ பாக்கியலக்ஷ்மி தாயே போற்றி
விளக்கினிலே வீற்றிருப்பாய்
ஸ்ரீ தீபலக்ஷ்மி தாயே போற்றி
நவநிதிகள் வழங்கும் தேவி
ஸ்ரீ குபேரலக்ஷ்மி தாயே போற்றி
எட்டு சித்திகள் தருபவளே
ஸ்ரீ யோகலக்ஷ்மி தாயே போற்றி
lakshmi devi patalu:
இஷ்ட வரங்கள் கொடுப்பவளே
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே போற்றி
அஷ்டைஸ்வர்யம் தருபவளே
ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி தாயே போற்றி போற்றி
பரந்தாமன் நாயகிக்கு
பத்மபீடம் ஆடும் தேவிக்கு
துளசி தளம் அணிந்தவளுக்கு
திவ்ய சுப மங்களம்
அலையாழித் தோன்றி வந்த
ஹரிமாயன் நாயகிக்கு
தமிழ் கடவுளின் கந்தர் அலங்காரம் பாடல் வரிகள்
நல்ல நினைவாற்றலை அளிக்கும் மேதா ஸூக்தம் பாடல் வரிகள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |