வரலக்ஷ்மி விரதம் முறை | Varalakshmi Vratham in Tamil | வரலட்சுமி விரதம் இருக்கும் முறை
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில், வரலட்சுமி விரதம் எப்படி இருக்க வேண்டும்.? (Varalakshmi Vratham Murai in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். ஆடி மாதத்தில் வரக்கூடிய விசேஷ நாட்களில் ஒன்று தான் வரலக்ஷ்மி விரதம். இந்நாளிற்காக பெண்கள் பெரிதும் காத்துக்கொண்டிருப்பார்கள். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த நாள்.
இந்நாளில், கன்னி பெண்கள் மற்றும் சுமங்கலி பெண்கள் விரதம் இருந்து லட்சுமியை வழிபடும் முறை ஆகும். கன்னி பெண்கள், தனக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று எண்ணி, இந்நாளில் விரதம் இருந்து லட்சுமி தேவியை வழிபடுவார்கள். அதேபோல், சுமங்கலி பெண்கள் தங்கள் கணவரின் ஆரோக்கியதிற்காகவும், நலத்திற்காகவும், ஆயுள் வேண்டியும் விரதம் இருந்து வழிபடுவார்கள். அப்படி புதிதாக வரலக்ஷ்மி விரதம் இருக்க நினைக்கும் பெண்களுக்கு எப்படி வரலக்ஷ்மி விரதம் இருக்க வேண்டும்.? என்ற குழப்பம் இருக்கும். எனவே, அவர்களுக்கு பயனுள்ள வகையில் வரலக்ஷ்மி விரத நாளில் எப்படி விரதம் இருந்து லட்சுமி தேவியை வழிபட வேண்டும்.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
வரலக்ஷ்மி விரதம் என்றால் என்ன.? அதன் வரலாறு/கதை என்ன.?
வரலட்சுமி விரதம் எப்படி இருக்க வேண்டும்.? | Varalakshmi Vratham Irupathu Eppadi:
- வரலட்சுமி என்றால் வரம் தரும் தெய்வம் என்று பொருள். வரலட்சுமி விரத நாளில், லட்சுமி தேவியை வழிபட்டால் செல்வம், பூமி, அன்பு, புகழ், அமைதி, இன்பம், வலிமை ஆகிய எட்டு தெய்வங்களான அஷ்டலட்சுமியை வழிபடுவதற்கு சமம்.
- அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். லட்சுமி தேவியின் ஸ்லோகங்களை உச்சரிக்க வேண்டும். மாவிலை மற்றும் கோலங்களில் வீட்டை அலங்கரிக்க வேண்டும்.
- வரலட்சுமி விரத நாள் அன்று, வீடு மற்றும் பூஜை அறைகளை சுத்தம் செய்து லட்சுமி தேவியின் உருவ படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு இட்டு மாலை அணிவித்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.
- மஞ்சள் மற்றும் குங்குமம் ஆகியவை தடவப்பட்ட தேங்காயை பூஜையறையில் வைத்து அதில் லட்சுமி தேவியை வீட்டிற்குள் அழைப்பார்கள். வடை, மாங்காய் சாதம், பருப்பு வடை போன்ற சிறப்பு உணவுகளும், பாயசம் போன்ற இனிப்பு உணவுகளை படைக்க வேண்டும்.
- வளையல், குங்குமம், வெற்றிலை, பழங்கள், பூக்கள் போன்ற பூஜைக்கு படைத்த பொருட்களை
- விரதத்தின் நடுவில் வாழைப்பழம், பால் மற்றும் துளசி தீர்த்தம் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
- வரலட்சுமி விரத பூஜைக்காக வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம் கொடுக்கலாம்.
- இவ்வாறு எளிய முறையில் வரலட்சுமி விரதம் இருந்து லட்சுமி தேவியை வழிபடலாம்.
வரலக்ஷ்மி விரதம் 2024 எப்போது.? மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்ய உகந்த நேரம் எது.?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |