வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வரலட்சுமி விரதத்தில் செய்ய கூடாத தவறுகள்

Updated On: August 6, 2025 1:49 PM
Follow Us:
varalakshmi viratham thavirkka vendiyavai
---Advertisement---
Advertisement

வரலட்சுமி விரதம் செய்ய கூடாதவை 

வரலட்சுமி விரதமிருந்து பூஜை செய்வர்கள். விரதமிருக்கும் போது அதனை முறையாக கடைபிடிக்க வேண்டும். இதில் சிறிய தவறு செய்தாலும் அதற்கான பலன் ஆனது கிடைக்காது. அதனால் வரலெட்சுமி விரதத்தில் செய்ய கூடாத தவறுகள் பற்றி அறிந்து கொள்வோம். 

சுத்தமாக இருப்பது:

வரலட்சுமி விரதத்திற்கு முதல்நாளே வீட்டை சுத்தம் செய்வீர்கள். அப்படி வீட்டை மட்டும் சுத்தம் செய்து பூஜை செய்தால் விரத்திற்கான பலன்கள் கிடைத்து விடுமா என்று கேட்டால் இல்லை. உங்களின் உடலையும், மனதையும் சுத்தமாக வைத்து கொண்டு பூஜை செய்ய வேண்டும். மனதில் தீய எண்ணங்களை வைத்து விரதமிருந்து பூஜை செய்வதால் எந்த பலனும் கிடைக்காது. 

பூஜை முறையை தவறாக பின்பற்றுவது:

பூஜையின் போது மந்திரங்கள், ஸ்லோகங்கள், பாடல்கள் போன்றவை பாடுவீர்கள். அப்படி பாடும் போது அவற்றை சரியாக உச்சரிக்க வேண்டும். தவறாக உரச்சரித்தால் பூஜைக்கான பலன் கிடைக்காது. 

பூஜை செய்வதற்கான பொருட்களை வாங்கி வைப்பது முக்கியமானது. அதில் எந்த பொருட்களையும் தவர் விட கூடாது. 

தவறான உணவு பழக்கம்:

விரத நாளில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். சைவ உணவுகளை மட்டும் தான் சாப்பிட வேண்டும். வெங்காயம், பூண்டு, இஞ்சி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போன்றவை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

வரலட்சுமி பூஜை நேரம் 

பிறரிடம் செய்யக்கூடாதவை:

அன்றைய நாள் யாரிடமும் கோபம் மற்றும் சண்டை போடுவதை தவிர்க்க வேண்டும். கெட்ட வார்த்தை கூறுவதை தவிர்க்க வேண்டும்.

பிரசாதம்:

வரலட்சுமி விரதத்திற்கு நைவேத்தியம் செய்து வழிபடுவீர்கள். இந்த பிரசாதத்தை வைத்து வழிபட்ட பிறகு அதனை நீங்கள் மட்டும் சாப்பிடாமல் மற்றவர்களுக்கும் பிரசாதத்தை வழங்க வேண்டும். 

விரதத்தை முறையாக முடிக்க வேண்டும்:

விரதம் இருக்கிறீர்கள் என்றால் அதனை முறையாக கடைபிடிப்பது அவசியமானது. முறையாக பூஜை மற்றும் வழிபாடுகளை செய்ய வேண்டும். அது போல விரதத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now