வரலக்ஷ்மி விரதம் 2024 எப்போது.? மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்ய உகந்த நேரம் எது.?

Advertisement

வரலக்ஷ்மி விரதம் 2024 | Varalakshmi Vratham 2024 Date and Time in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்த ஆண்டு வரலக்ஷ்மி விரதம் எப்போது வருகிறது.? பூஜை செய்வதற்கு உகந்த நேரம் எப்போது.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். வரலக்ஷ்மி விரத நாளில் சுமங்கலி பெண்கள் அவர்களின் கணவரின் நலனுக்காகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காகவும் விரதம் இருந்து மகாலட்சுமியை பூஜை செய்து வழிபடுவார்கள். அதேபோல், கன்னி பெண்கள் விரதம் இருந்து வழிபட்டால் நல்ல திருமண வரன் கைக்கூடி வரும்.

இந்நாளில், மகாலட்சுமிக்கு பூஜை செய்து வழிபட்டால் வீட்டில் எப்போதும் மகாலட்சுமி வசம் செய்வாள். அதுமட்டுமில்லாமல், நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் என அனைத்து நன்மைகளையும் தருவாள். எனவே, இப்படி பல நன்மைகளை அளிக்கும், வரலக்ஷ்மி விரதம் 2024 எப்போது வருகிறது.? என்பதை தெரிந்துகொள்வது அவசியம் அல்லவா.? எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில், Varalakshmi Vratham 2024 Date and Time in Tamil பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

வரலக்ஷ்மி விரதம் தேதி மற்றும் நேரம் 2024:

 இந்த ஆண்டு 2024 வரலக்ஷ்மி விரதம் ஆங்கில தேதிக்கு ஆகஸ்ட் 16 ஆம் தேதியும், தமிழ் தேதிக்கு ஆடி 31 ஆம் தேதியும் வருகிறது. அதாவது ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் பெருமாளுக்கு உரிய ஏகாதசி மற்றும் துவாதசி திதிகள் சேர்ந்த நாளாக இருக்கிறது. அன்று ஸர்வ ஏகாதசி.  

அதுமட்டுமில்லாமல், இந்நாளில் தான் பூராடம் நட்சத்திரமும், மூல நட்சத்திரமும் இணைந்து வருகிறது.பூராடம் நட்சத்திரம் பிரகஸ்பதிக்கும், ஈசனுக்கும் உரிய நட்சத்திரமாகும். எனவே, அன்றைய தினம் அனைத்து கடவுள்களையும் வணங்க உகந்த நாளாக இருக்கிறது.

வரலக்ஷ்மி விரதம் 2024

வரலட்சுமி விரத ஸ்லோகம்

மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்க உகந்த நேரம் 2024:

ஆகஸ்ட் 15 – மாலை 6 முதல் 8 வரை
ஆகஸ்ட் 16 – காலை 6 முதல் 07.20 வரை

வரலட்சுமி பூஜை செய்வதற்கான நேரம் 2024:

ஆகஸ்ட் 16 – காலை 9 முதல் 10.20 வரை
ஆகஸ்ட் 16 –  மாலை 6 மணிக்கு மேல்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement