வரலட்சுமி விரத ஸ்லோகம் | Varalakshmi Vratham Slogam in Tamil..!

Advertisement

வரலட்சுமி விரத ஸ்லோகம் | Varalakshmi Vratham Slogam in Tamil..!

பொதுவாக நாம் அனைவரும் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து வருவோம். இவ்வாறு நாம் பணம் சம்பாதிப்பதில் செலவுகள் என்பது சிலருக்கு ஏற்பட்டு கொண்டே இருக்கும். செலவுகள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தால் வீட்டில் செல்வம் என்பது நிலைத்து இருக்காது. அதிலும் சிலருக்கு செலவுகள் அதிகமாகவும் இருக்காது ஆனால் வீட்டில் உள்ள பணம் எப்படி தான் செலவு ஆகிறது என்றே தெரியாமல் இருக்கும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வீட்டில் செல்வம் பெருகி லட்சுமி தேவி நம் வீட்டிற்கு வர வேண்டும் என்று வரலட்சுமி விரதம் இருப்பது நல்லது. இத்தகைய பூஜையினை ஆன்மீகத்தில் வரலட்சுமி நோன்பு என்றும் கூறுவார்கள். எனவே பல வகையான சிறப்புகளை கொண்டுள்ள வரலட்சுமி அம்மனுக்கு விரதம் இருந்து பூஜை செய்யும் போது கூற வேண்டிய ஸ்லோகம் பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.

கந்தர் அநுபூதி பாடல் வரிகள்

வரலட்சுமி விரத ஸ்லோகம்:

வரலட்சுமி விரத ஸ்லோகம்

ஓம் லக்ஷ்மிதேவியே நமோ நம

ஓம் தாமரைப் பூவில் அமர்ந்தவளே நமோ நம

ஓம் பாற்கடல் உதித்தோய் நமோ நம

ஓம் செந்தூரத் திலகம் அணிந்தாய் நமோ நம

ஓம் நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நமோ நம

ஓம் கருணையில் சிறந்தவளே நமோ நம

ஓம் அலை கடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே நமோ நம

ஓம் அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே நமோ நம

ஓம் அன்பர்களைக் காத்திடும் அலைமகளே நமோ நம

ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே நமோ நம

ஓம் விஜயலக்ஷ்மியே நமோ நம

ஓம் ராஜ்ய லக்ஷ்மியே நமோ நம

ஓம் ஜயலக்ஷ்மியே நமோ நம

ஓம் தான்ய லக்ஷ்மியே நமோ நம

ஓம் தனலக்ஷ்மியே நமோ நம

ஓம் தைர்ய லக்ஷ்மியே நமோ நம

ஓம் மஹாலக்ஷ்மியே நமோ நம

ஓம் உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே நமோ நம

வாழ்வு ஆனவள் துர்கா பாடல் வரிகள்

வரலக்ஷ்மி விரதம் கதை:

வரலக்ஷ்மி விரதம் ஒரு விதமான பலன்களை மட்டும் அளிக்கலாம் எண்ணற்ற நன்மைகள் அளிக்கிறது. அதாவது உடல் ஆரோக்கியம், மாங்கல்ய பாக்கியம் மற்றும் செல்வ செழிப்பு என இவற்றை எல்லாம் நமக்கு அளிக்கிறது.

அந்த வகையில் இந்த விரதம் உருவானதிற்கு என்று ஒரு தனி கதை இருக்கிறது. அதாவது தேவலோகத்தில் நீதிபதியாக சித்திரநேமி என்ற பெண் இருந்து வந்தாள். இந்த பெண் அங்கு நடக்கும் குற்றங்களை எல்லாம் அறிந்து அதற்கு ஏற்றவாறு தண்டனைகளை அளித்து வந்தால்.

இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது ஒரு முறை யார் பக்கம் நியாயம் மற்றும் யார் பக்கம் அநியாயம் என்று அறியாமல் தீர்ப்பினை ஒரு பக்கமாக வழங்கிய காரணத்தினால் பார்வதி தேவி அவர்கள் கோபம் அடைந்து குஷ்டரோகம் வர வேண்டும் என்ற சாபத்தினை வழங்கி விட்டார்.

இப்படிப்பட்ட சாபத்திற்கு பிறகு சித்திரநேமி பார்வதி தேவியிடம் மன்னிப்பு கேட்டபோது இந்த சாபத்தில் இருந்து விடு பட வேண்டும் என்றால் அதற்கு வரலக்ஷ்மி செய்ய வேண்டும் என்று கூறி விட்டாள்.

அதன் பின்பு சித்திரநேமி பூலோகம் வந்து குளக்கரையில் வரலக்ஷ்மி விரதம் செய்த பிறகு பார்வதி தேவியின் சாபத்தினால் வந்தால் நோய் நீங்கி விட்டது. இதுவே தீராத நோயினையும் தீர்க்கும் வரலக்ஷ்மி விரதம் என்று உருவான கதை ஆகும்.

சிவபெருமானை வணங்க உதவும் என்னப்பன் அல்லவா பாடல் வரிகள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement